Advertisement Contact

கொரோனாவால் இத்தாலியில் 16 பாதிரியர்கள் பலி,

உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா தாக்கத்தின் செய்திகள் உலக மக்களை நடங்கச் செய்து கொண்டிருக்கின்றன. நேற்று மட்டும் இத்தாலியில், 627 பேர் பலியாகியிருக்கும் செய்தி அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சீனாவின் வுகானில் இந்த கொரோனா உருப்பெற்றதாக சொல்லப்பட்டாலும், பலி எண்ணிக்கையில் சீனாவையும் இத்தாலி பின்னுக்குத் தள்ளியிருக்கிறது. இத்தாலியில் இதுவரை 4,032 பேரின் உயிரைப் பறித்துவிட்டது கொரோனா.

இந்நிலையில் பலியானவர்களில் 18 பாதிரியார்களும் பலியாகியிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நோய்வாய்ப்பட்ட மக்களிடம் சென்று தைரியம் கொடுக்க வேண்டும் என போப் ஆண்டவர் கூறியதால், அதன்படி சில பாதிரியார்கள் நேரில் சந்தித்து தைரியம் கொடுத்துள்ளனர்.

இதன்போர் அவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் மிலனுக்கு அருகிலுள்ள பெர்காமோ மறைமாவட்டத்தில் மட்டும் குறைந்தது 10 பாதிரியார்கள் கோவிட் -19 காரணமாக இறந்துவிட்டதாக கத்தோலிக்க செய்தித்தாள் Avvenire தெரிவித்துள்ளது.

மேலும் ஐந்து இறப்புகள் பர்மா நகரில் பதிவு செய்யப்பட்டுள்ளன, மற்ற வழக்குகள் வடக்கு இத்தாலியில் உள்ள ப்ரெசியா, கிரெமோனா மற்றும் மிலன் ஆகிய நகரங்களில் பதிவாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 11,430 பேர் பலியாகியிருப்பதாகவும், 277,131 பேர் வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியிருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.