Advertisement Contact

துபாயில் பலத்த மழை காரணமாக விமானச் சேவைகள் பாதிப்பு,

துபாயில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் சில விமானங்கள் அருகில் உள்ள விமான நிலையங்களுக்குத் திசை திருப்பி விடப்பட்டுள்ளன.

அத்துடன் சில விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் சில விமானங்களின் சேவை தாமதமடைந்துள்ளது.

பலத்த மழை காரணமாக விமான ஓடுபாதைகள் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.