Advertisement Contact

உலக கோப்பை பைனலில் இந்தியா-வங்கதேசம்,

போர்ட்செப்ஸ்ட்ரூம்: 'ஜூனியர்' உலக கோப்பை பைனலில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதுகின்றன.

ஐ.சி.சி., சார்பில் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. இதன் பைனலுக்கு 'நடப்பு சாம்பியன்' இந்திய அணி முன்னேறியது. நேற்று நடந்த இரண்டாவது அரையிறுதியில் வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் மோதின.

முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி லிட்ஸ்டோன் (44), லெல்மேன் (24), ஒயிட் (18) சற்று உதவினர். வீலர் 75 ரன்கள் எடுத்து கைகொடுத்தார். மற்றவர்கள் ஏமாற்ற நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்தது.

எளிய இலக்கைத் துரத்திய வங்கதேச அணிக்கு பர்வேஸ் (14), ஹசன் (3) கைவிட்டனர். தவ்ஹித் 40 ரன் எடுக்க மகமதுல் (100) சதம் விளாசி வெற்றியை உறுதி செய்தார் வங்கதேச அணி 44.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்டில் வெற்றி பெற்றது. ஷகாதத் (40), ஷமின் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.

'ஜூனியர்' உலக கோப்பை தொடரில் வங்கதேச அணி முதன் முறையாக பைனலுக்கு முன்னேறியது. வரும் 9ம் தேதி போர்ட்செப்ஸ்ட்ரூமில் நடக்கும் பைனலில் இந்தியா, வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.