Advertisement Contact

முட்டை அதிகம் சாப்பிட்டால் ஆபத்து,

காலையில் சாப்பிடும்போது முட்டை சாப்பிட்டால் மிகவும் நல்லது. ஒரு நாளைக்கு நாம் ஒரு முட்டையாவது சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் நமக்கு கிடைக்கும்.

முட்டையில் அதிகமான புரதச்சத்து மற்றும் விட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. முட்டை சாப்பிட்டால் எலும்புகள் மற்றும் பற்களுக்கு அதிக வலிமை கொடுக்கும்.

முட்டையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், லூடின் (Lutein) மற்றும் சியாங்தின் போன்றவை கண் புரை போன்ற கண்கள் தொடர்பான நோய்கள் நம்மை அண்டாமல் முட்டை தற்காக்கும்.

எதுவுமே அளவாக இருந்தால் நல்லது. அளவுக்கு அதிகமாக முட்டையை நாம் சாப்பிட கூடாது.

முட்டையில் நமக்கு கிடைக்கும் நன்மை

நம் அன்றாட உணவில் தினம் ஒரு முட்டை சாப்பிடுவதால் படிப்படியாக நாம் உடல் எடையை குறைக்கலாம். உடல் குறைக்க விரும்புவோர் இப்படி செய்தால் மிக விரைவில் உடல் எடையை குறைத்து விடலாம்.

நாம் முட்டையை உணவாக சாப்பிடும்போது ரத்தத்தின் அளவு ஒரே நிலையில் இருக்கும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முட்டை சாப்பிடுவதால் முட்டையில் உள்ள நல்ல கொழுப்புகள் எவ்விதமான உடல் நலக் கோளாறுகளை நமக்கு கொடுக்காது.

இவர்கள் மட்டும் முட்டை சாப்பிட்டால் போதும்

உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள், கடுமையான உடற்பயிற்சி செய்பவர்கள், ஒரு நாளைக்கு முட்டையின் 6 வெள்ளைக் கருவை சாப்பிட்டால் போதும். இவர்கள் 2 மஞ்சள் கருவை கூட சேர்த்து சாப்பிடலாம். இதனால் உடலில் உள்ள அனைத்து சதைப்பகுதியும் நன்கு வலிமை கொள்ளும்.

உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முட்டை சாப்பிட்டால் சிறந்தது. ஏனெனில் மற்ற உணவுகளில் இருந்தும் சத்துகள் அதிகளவில் கிடைப்பதால், அதிக முட்டை சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்வது நலனை கொடுக்கும்.

சர்க்கரைநோய் உள்ளவர்கள் மட்டும் முட்டை சாப்பிடும் போது கவனம் தேவை. ஏனெனில் சர்க்கரை நோயாளிகள் முட்டை சாப்பிட்டால் அவர்களுக்கு இதய நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

முட்டை சாப்பிடும் முறை

முட்டையை காய்கறிகளும் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் நல்லது.

முட்டையுடன் இறைச்சி, சீஸ், வெள்ளை பிரெட் போன்ற கொழுப்பு நிறைந்த உணவுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிடும்போது நன்றாகதான் இருக்கும். ஆனால் பின்னர் பக்கவிளைவுகளை நமக்கு கொடுத்துவிடும்.

முடிந்த அளவுக்கு முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிட்டால் மிகவும் சிறந்தது. மஞ்சள் கருவை நீக்கிய ஆம்லெட் அல்லது வேகவைத்த முட்டையாக கூட நாம் சாப்பிட்டுக் கொள்ளலாம்.