Advertisement Contact

கொரோனா ஊரடங்கால் சுவிஸ் மக்களிடம் ற்பட்டுள்ள திடீர் மாற்றம்.

சுவிட்சர்லாந்தில் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பாதிக்கும் மேற்பட்ட மக்களிடையே மது அருந்தும் பழக்கம் அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக வியாழனன்று வெளியான ஆய்வறிக்கையில், சுவிஸில் 46 சதவீத மக்களிடையே கொரோனா காலகட்டத்தில் அடிக்கடி மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மேலும் 41 சதவீத மக்கள் அடிக்கடி தனியாகவே மது அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.

ஆய்வில் பங்கேற்ற பலரும், மது அருந்த அதிக நேரம் கிடைப்பதாகவும், குடும்பத்தாருடனே அடிக்கடி மது அருந்துவதாகவும், அதிக சலிப்பாக இருப்பதால் மது அருந்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.

சிலர், கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக நாள் தோறும் மது அருந்தும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அதில் பலரும், வாரம் ஒரு முறை மட்டுமே இதற்கு முன்னர் மது அருந்தி வந்ததாகவும், ஆனால் கொரோனா ஊரடங்கு அளித்த மன அழுத்தம் நாள் தோறும் மது அருந்த தூண்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் இல்லாத நிலையில், குடியிருப்பில் இருந்தே பணி செய்வதால், வேலை முடித்ததும் நாளும் மது அருந்துவதே பழக்கமாகிவிட்டது என்கிறார்கள் சிலர்.

மட்டுமின்றி, தற்போது அதிக நேரம் கிடைப்பதாகவும், அதனாலையே மதுவை நாட வாய்ப்பாக அமைந்துள்ளதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர்.

சமீப மாதங்களாக சுவிஸில் மது விற்பனையும் கணிசமாக அதிகரித்துள்ளதை சில்லறை விற்பனையாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

மட்டுமின்றி, மது உள்ளிட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு மையங்களில் தற்போது அதிகமானோர் உதவி கோரி விசாரிக்க துவங்கியுள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.