Advertisement Contact

செப்டம்பர் மாத ராசி பலன் 01-09-2020தொடக்கம் 30-09-2020 வரை.

தொகுப்பு. மார்க்கண்டு தேவராஜா(LLB-MP-TGTE)Mayuraagoldsmith-Zurich-Switzerland-பொதுவாக மேஷம் முதல் மீனம் வரை  உங்களது ராசிபலன் யாருக்கு அதிஷ்டம் யாருக்கு துரதிஷ்டம் இந்த மாதம் எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம்

மேஷம் செப்டம்பர் மாத பொதுப்பலன்கள்:

மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் செல்வாக்கு, கெளரவம், புகழ் அனைத்தும் மேலோங்கி இருக்கும். ஆனால், வேலையில் கவனம் தேவை. உயரதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்து கொள்ள வேண்டாம். சக ஊழியர்களுடன் வெளிப்படையாகப் பேசுவதைத் தவிப்பதும் அவசியம். இது போன்றவற்றில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எனினும் தொழில் துறையில் நீங்கள் மிகச் சிறப்பாகச் செயல்படுவீர்கள் எனலாம். பணவரவும் மிக நன்றாக இருக்கும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட காரியங்கள் கைகூடும். செய்தொழிலில் நல்ல லாபங்கள் கிடைக்கும். பொதுவாக ஜீவனம் நன்றாக நடைபெறும். குடும்பத்திலும் நல்ல சந்தோஷம் நிலவும். குறிப்பாக, பெண்களால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்குப் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகமாகும். எனினும், இந்த நேரத்தில் உடன் பிறந்தவர்களிடம் கவனமாக இருப்பது அவசியம்.ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

திருமண வாழ்க்கை:

இது, காதல் உறவுகளுக்கு உகந்த காலம் எனலாம். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், சந்தோஷமும் நிலவக்கூடும். காதலர்களுக்கும் அவர்கள் விரும்பும், நல்ல பலன்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையேயும், அன்பும், பாசமும் நிறைந்து காணப்படும். எனினும், திருமணம் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை.  

நிதி:

நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். வாசனை திரவியங்கள், அழகு சாதனப் பொருட்கள் போன்ற தொழில்களின் மூலம் நீங்கள் அதிக லாபம் பெறலாம். பொதுவாக, உங்கள் பொருளாதாரத்  தேவைகள் அனைத்தும், இப்பொழுது சிறப்பாக நிறைவேறக் கூடும். எனினும், வாழ்க்கைத் துணையின் மூலமாக ஏற்படும் தனவரவில், சில மனக்கசப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

வேலை:

இந்தக் காலகட்டத்தில், நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை விட்டு விடும் எண்ணம் தோன்றலாம். ஆயினும், இந்த விஷயத்தில் பொறுமையைக் கடைபிடிப்பது நல்லது. மேலதிகாரிகளிடம் நீங்கள் கவனமாக இருப்பது அவசியம். உங்களது பணிகளை, கவனமாகச் செய்து முடிப்பதும் அவசியம். எனினும், பணியிடத்தில் உங்கள் மதிப்பை நிரூபிக்க ஒரு நல்ல வாய்ப்பு உங்களைத் தேடி வரக்கூடும்.

தொழில்:

இந்த நேரத்தில், தொழிலில், சிறு பிரச்சனைகள் வந்து விலகக்கூடும். ஆயினும் தொழில் நன்றாகவே நடைபெறும் எனலாம். ஆனால், சில நேரங்களில் நீங்களே உங்களுக்கு நஷ்டத்தை வரவழைத்துக் கொள்ளலாம். எனவே, எச்சரிக்கையாகச் செயல்படவும். சனிக்கிழமைகளில் வயதானவர்களுக்கு அன்னதானம் கொடுப்பது, உங்கள் தொழிலை மேம்படுத்தும்.

தொழில் வல்லுநர்கள்:

மேஷ ராசி தொழில் வல்லுநர்களுக்கு, இது, ஒரு முன்னேற்றம் தரும் காலமாக இருக்கும். வேலையில் உங்கள் கவனமும், அர்ப்பணிப்பு உணர்வும் பாராட்டுகளைப் பெற்றுத்தரும். இது உங்களுக்கு, ஒரு நல்ல பணிச் சூழலை உருவாக்கித் தரும். அலுவலகத்தில் சக பணியாளர்களுடன்  நட்புடன் நடந்து கொள்வது நன்மை தரும்.

ஆரோக்கியம்:

உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். முன்பே உங்கள் உடலில் ஏதேனும் பாதிப்பு இருந்தாலும் கூட, இந்த மாதம் நீங்கள் பூரண உடல் நலம் பெறும் வாய்ப்புள்ளது. எனினும், சிலருக்கு நரம்பு தொடர்பான பிரச்சனைகள் வந்து விலகலாம். பச்சைக் காய்கறிகள், பழங்கள் மற்றும் சத்தான உணவுகள் போன்றவற்றை உட்கொள்வது, நல்ல ஆரோக்கியம் தரும்.  

மாணவர்கள்:

இந்த மாதம், மாணவர்களுக்குக் கல்வியில் அதிக கவனம் தேவை. படிப்பதை சிலர் மறந்து விடுவீர்கள். உங்கள் உடல் நிலையிலும் கவனம் தேவை. எனினும், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் முழு ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். இவற்றை கவனத்தில் கொண்டு உழைத்துப் படித்தால், இந்தக் காலகட்டத்திலும் உங்கள் படிப்பு சீரான போக்கில் செல்லும்.

சுப தினங்கள் : 2,3,16,17,24,25,26,29,30
அசுப தினங்கள் : 4,5,6,18,19,22,23

பரிகாரம்:

    ஸ்ரீ முருக பெருமான் மட்டும் ஸ்ரீ ஆதிஷேசன் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
    செவ்வாய், சனி, குரு, ராகு, கேது முதலிய கிரக மூர்த்திகளுக்கு ஹோமம், பூஜை செய்து வழிபடுதல்.
    பழைமையான சில ஆலயங்களுக்குப் புனித யாத்திரை செல்லுதல். கோவில்களுக்குத் திருப்பணி செய்தல். புற்றுக்குப் பால் வார்த்தல்.

 

ரிஷபம் செப்டம்பர் மாத பொதுப்பலன்கள்:

ரிஷப ராசி அன்பர்களுக்கு, இது ஒரு சராசரியான மாதமாக இருக்கக்கூடும். உங்கள் தன வரவு சுமாராக இருக்கும். சிலருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு விலகும். குடும்பத்தில் மனநிம்மதி இல்லாமலும் போகலாம். உங்களின் சில செயல்களின் காரணமாக, மற்றவர்கள் உங்களுக்கு எதிரிகளாகவும் மாறக்கூடும். எச்சரிக்கை தேவை. வெளியூர்ப் பயணங்களினால், நீங்கள் அதிக செலவு செய்ய நேரிடலாம். எனினும், உங்கள் புகழ் மற்றும் கெளரவம் சிறப்பாக இருக்கும். குழந்தைகள் நன்றாகப் படிப்பதும், உங்களுக்கு ஆனந்தம் தரும். செய்யும் தொழிலில் லாபம் உண்டாகும். காரியத் தடங்கல்கள் ஏற்பட்டு விலகும். சிலருக்குப் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தந்தையாரின் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கும். சிலருக்கு, திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைப்பதற்கும் இடமுள்ளது. உங்களில் சிலர், ஆன்மீகப் பயணங்களையும் மேற்கொள்ளலாம்.ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

திருமண வாழ்க்கை:

பொதுவாக, உங்கள் துணையுடனான உங்களது அன்பான உறவு, நல்ல முறையில் தொடரும். ஆனால், காதல் வாழ்க்கையில் பிரிவினைக்கு வாய்ப்பு உள்ளது. எனவே கவனம் தேவை. எனினும், வாழ்க்கைத் துணையுடன் உங்கள் உறவு நன்றாக  இருக்கும். இந்த நேரத்தில், குடும்பப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் நீங்கள் பொறுமையைக் கடைபிடிப்பது நல்லது.  

நிதி:

இது ஒரு சுமாரான காலம் எனலாம். எனினும், பொருளாதார ரீதியாக இது உங்களுக்கு ஓரளவு மகிழ்ச்சி தருவதாகவே அமையும். உங்கள் வருமானம், உங்களது அனைத்துப் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதற்குப் போதுமானதாக இருக்கும். இப்பொழுது, உங்கள் குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு, நீங்கள் முன்னுரிமை அளிப்பீர்கள்.

வேலை:

உங்கள் பணிகள் உங்களுக்கு, அங்கீகாரம் மற்றும் திருப்தியான மனநிலையைப் பெற்றுத் தரும். வேலையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்வதற்கு, இது உகந்த நேரம் ஆகும். உங்கள் பணிகளில் நீங்கள் காட்டும் அர்ப்பணிப்பு, அலுவலகத்தில் நீங்கள் உரிய அங்கீகாரம் பெறுவதற்கு உதவியாக இருக்கும்.

தொழில்:

வியாபாரத்தைப் பொறுத்த வரையில், உங்களுக்கு இது சுமாரான காலம் எனலாம். இந்த நேரத்தில், நீங்கள், குறைந்த பட்ச முயற்சிகளைச் செய்துவிட்டு, அதிக பலன்களை எதிர்பார்க்க முடியாது. இந்த ஆண்டு முழுவதுமே, தொழில் தொடர்பாக, நீங்கள் எந்தவொரு அவசர முடிவும் எடுக்காமல் இருப்பது நல்லது.
தொழில் வல்லுநர்கள்.

ரிஷப ராசி தொழில் வல்லுநர்களின் நடவடிக்கைகள், இந்த மாதம், சிறப்பாகவே அமையும். தளராமல், உங்கள் முயற்சிகளைத் தொடர்வதன் மூலம். எதிர்பார்த்த பலன்களை நீங்கள் அடையலாம். தன்னம்பிக்கையுடன் செயல்படுவது, உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, சிறப்பாகப் பணியாற்ற உதவும்.  

ஆரோக்கியம்:

உங்கள் உடல் நலத்தில் அக்கறையுடன் இருப்பது அவசியம். தவறாமல் தியானம் செய்வது, உங்களை ஆரோக்கியமாக  வைத்து கொள்ள உதவும். உடலுக்குத் தேவையான ஒய்வு கொடுப்பதும், உங்கள் உடல் நலத்தைக் காத்து, நன்மை பயக்கும்.

மாணவர்கள்:

கல்வி முயற்சிகளுக்கு, இது, முன்னேற்றமான மாதமாக இருக்கும். மாணவர்களாகிய நீங்கள் நல்ல அறிவாற்றலுடன் செயல்படுவீர்கள். படிப்பில் உங்கள் கடின முயற்சி காரணமாக நல்ல நிலையை அடைவீர்கள். இந்த நேரத்தில், படிப்பு மற்றும் விளையாட்டு என்ற இரண்டு துறைகளிலும் நீங்கள் சாதனை படைக்கும் வாய்ப்புள்ளது.

சுப தினங்கள்  : 1,4,5,6,18,19,27,28
அசுப தினங்கள் : 2,7,8,20,21,24,25,26.

பரிகாரம்:

    பகவான் ஸ்ரீ லக்ஷ்மீ நரசிம்மர் மற்றும் சித்தர்கள் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
    சுக்கிரன், சனி, குரு, ராகு, கேது முதலிய கிரக மூர்த்திகளுக்குப் பூஜை, ஹோமம் செய்து வழிபடுதல்.
    வாழும் சித்தர்களைத் தரிசனம் செய்தல். கோவில் திருப்பணி செய்தல். நாய்க்கு உணவு அளித்தல்.


மிதுனம்

மிதுனம் செப்டம்பர் மாத பொதுப்பலன்கள்:

மிதுன ராசி அன்பர்களே! பொதுவாக, இது உங்களுக்கு நன்மைகள் அளிக்கும் மாதமாக இல்லாமல் போகலாம். இப்பொழுது உங்கள் உடல் நலனில் சிறப்பு கவனம் தேவைப்படலாம். பணம் தொடர்பான விவகாரங்களில் மற்றவர்களிடம் மனக்கசப்பு ஏற்படலாம். எதிரிகளால் தொல்லை விளையலாம். எந்த ஒரு செயலிலும், தொழிலிலும் நீங்கள் தெளிவு இல்லாமல் காணப்படலாம். பொதுவாக, பலவிதக் குழப்பங்களும் ஏற்படலாம். சிலர் பலவீனத்தாலும் பாதிக்கப்படலாம். எனவே, உடல் நிலையுடன் கூட, உங்கள் மன நிலையிலும் இப்பொழுது அக்கறை தேவைப்படலாம். இருப்பினும், இவை அனைத்தையும் நீங்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்வீர்கள். தற்போது குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்றாலும், அதுபோல உங்கள் வருமானம் அல்லது லாபமும் அதிகரிக்கக் கூடும். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களின் தவறான அபிப்ராயங்கள், உங்கள் முயற்சியால் விலகும். உங்கள் குடும்ப விஷயங்களை மென்மையாக அணுகுவது நலம் தரும். ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.  

திருமண வாழ்க்கை:

காதலுக்கு இது சுமாரான காலமாகும். இருப்பினும், சிலருக்குப் புதிய காதல் தொடர்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில், உங்கள் வாழ்க்கைத் துணையோடு உங்கள் உறவுகளில் பாதிப்பு இருக்கக் கூடும். எனினும், உங்கள் சமூகத் தொடர்புகள் சிறப்பாக இருக்கும். சிலர், சிறு பயணங்கள் செல்லக்கூடும்.

நிதி:

நிதிநிலை, தற்காலிகமாக, மந்தமாக இருக்கக் கூடும். எனினும், இந்த நேரத்தில் உங்கள் பொருளாதாரத் தேவைகள் அனைத்தும், சுமாராக நிறைவேறிவிடும். சிலர், நண்பர்களுடனான பொழுது போக்குகளுக்குப் பணம் செலவழிப்பீர்கள். இருப்பினும், பணம் தொடர்பான எந்த விஷயத்தைச் செய்வதற்கு முன்பும், ஒரு முறைக்கு இரண்டு முறை யோசிப்பது நல்லது.

வேலை:

வேலையில் நீங்கள் சில முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். எனவே இது உங்கள் வளர்ச்சிக்கான காலமாக இருக்கக்கூடும். புதிய தொழில் நுட்பங்களால் நீங்கள் நல்ல அனுபவம் பெறும் வாய்ப்பு உருவாகும். உங்கள் கடின முயற்சிகளின் மூலம், உங்களது அனைத்து எதிர்பார்ப்புகளையும் நீங்கள் நிறைவேற்றிக் கொள்ளலாம்.

தொழில்:

தொழில் துறையில், தற்போதுள்ள பணிகளில் நீங்கள் கவனம் செலுத்துவது அவசியம். உங்கள் தொழில் கூட்டாளிகள், சில பணிகளை நிலுவையில் வைத்திருப்பதற்கான சாத்தியம் உள்ளது. மேலும், சில வியாபார நடவடிக்கைகளையும் இப்பொழுது நீங்கள் ஒத்திப்போட வேண்டியிருக்கலாம். தொழில் ஒப்பந்தங்கள் வழியாகவும், இப்பொழுது நீங்கள் சாதகமான பலன் காண இயலாமல் போகலாம். எனவே, மிகுந்த எச்சரிக்கை தேவைப்படும் காலம் இது.

தொழில் வல்லுநர்கள்:

இந்த மாதம், மிதுன ராசி தொழில் வல்லுநர்களின் நடவடிக்கைகள் சிறப்பாக இருக்கும். நேரத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப உங்கள் திட்டங்களை நீங்கள் தீட்டுவது, நன்மை பயக்கும். உங்கள் பணிகளைத் தன்னம்பிக்கையுடன் மேற்கொள்வது, உங்களது திறமைகளை நன்கு வெளிப்படுத்தி, சிறப்பாகச் செயலாற்ற உதவும்.

ஆரோக்கியம்:

உங்கள் ஆரோக்கியம் சுமாராகவே இருக்கக் கூடும். உங்களில் சிலர், குறிப்பாக, வாதம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்படலாம். எனவே, உடல் நலத்தில் எந்தவித அலட்சியமும் காட்டாமல், அதில் முழு அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.

மாணவர்கள்:

படிப்பதற்கும், சிறந்த கல்வி அனுபவத்தைப் பெறுவதற்கும், இது சரியான நேரம் எனலாம். உங்கள் திறந்த மனதும், பரந்த மனப்பான்மையும்,  உங்கள் தனிப்பட்ட திறமைகளையும், நற்பெயரையும் மேம்படுத்த உதவும். உங்கள்  கல்வித் திறனால் பெற்றோர்களும் மன மகிழ்ச்சியடைவார்கள்.

சுப தினங்கள்  : 2,3,7,8,20,21,29,30.
அசுப தினங்கள் : 1,9,10,11,22,23,27,28

பரிகாரம்:

    ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ ஆதிஷேசன் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
    புதன், சனி, குரு, ராகு, கேது ஆகிய கிரக மூர்த்திகளுக்குப் பூஜை, ஹோமம் செய்து வழிபடுதல்.
    ஏழை எளியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு அன்னதானம் வழங்குதல் மற்றும் உதவி செய்தல். ரத்த தானம் செய்தல்.
     

கடகம் செப்டம்பர் மாத பொதுப்பலன்கள்:

கடக ராசி அன்பர்களுக்கு, இதை, ஓரளவு நல்ல மாதம் என்றே கூறலாம். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும். தேவையான நேரங்களில் உங்களுடைய கூர்மையான அறிவாற்றல் உங்களுக்குக் கை கொடுக்கும். இந்த நேரத்தில், பல்வேறு பணிகளை ஒரே நேரத்தில் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அது போன்ற தருணங்களில் கவனமாக நடந்து கொள்ளவும். தொழில் சார்ந்த பணிகளிலும் நீங்கள் கவனமாக இருப்பது அவசியம். சிறிய அளவில் பயணங்கள் மேற்கொள்ள நேரிடலாம். இதனால் செலவுகளும் ஏற்படலாம்.  பொதுவாக, நீங்கள் மேற்கொள்ளும் பல நடவடிக்கைகளிலும் சாதாரண பலன்களே கிட்டக்கூடும். கடுமையான வேலைப்பளுவால் உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் போகலாம். இதனால் மருத்துவ செலவுகளும் ஏற்படலாம். தாய்க்கும் உடல் நலக்குறைவு ஏற்படலாம். கவனம் தேவை. ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.  

திருமண வாழ்க்கை:

காதலர்களுக்கு இது அனுகூலமான காலமாக இருக்கும். காதல் உறவுகளில் அன்பும், பாசமும் நிறைந்து காணப்படும். எனினும், உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இப்பொழுது அதிக பேச்சைக் குறைத்துக் கொள்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களுடனும் நல்லுறவோடு இருப்பதும் நலம் தரும்.  

நிதி:

நிதிநிலை சிறப்பாக இருக்கும். பணம் தொடர்பான விஷயங்களில் வளர்ச்சி ஏற்படும். தொழில் மூலமும் லாபம் வந்தடையும்.

வேலை:

வேலையில் பல நல்ல முன்னேற்றங்கள் காணப்படும். ஆனால், இதற்கான  வாய்ப்புகளை நீங்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்வது அவசியம். முடிந்தவரை உங்கள் அனைத்துப் பணிகளையும், நிலுவையில் வைக்காமல், விரைவாக முடிப்பதும் அவசியம். இவை உங்களுக்குச் சாதகம் தரும்.  

தொழில்:

இந்த நேரத்தில், தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படக்கூடும். குறிப்பாக, பூமி சம்பந்தப்பட்ட தொழில்கள் பல வகையில் லாபம்  தரலாம். வியாபாரத்தில் நீங்கள் காட்டும் திறமையால், பிறர் உங்கள் முக்கியத்துவத்தை உணர்வார்கள். தொழில் போட்டி காரணமாக உங்களுக்கு ஏதேனும் கஷ்டங்கள் நேர்ந்தாலும், அவற்றை நன்கு சமாளித்து விடுவீர்கள்.

தொழில் வல்லுநர்கள்:

கடக ராசி தொழில் வல்லுநர்களின் செயல்திறன் காரணமாக, அவர்கள் நன்மையான பலன்களை எதிர்பார்க்கலாம். பணியிடத்தில் உங்கள் தனிப்பட்ட திறன்களை வெளிக்காட்டும் வகையில், நீங்கள் செயல்படுவீர்கள். இந்த மாதம், உங்களுக்குப் பதவி உயர்வு வாய்ப்புகள் அல்லது புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஆரோக்கியம்:

உங்கள் உடல்நிலையில் கவனம் தேவை. சிலருக்கு மூட்டு வலி அல்லது நரம்புத் தளர்ச்சி ஏற்படலாம். கவனம் தேவை. இருப்பினும், ஏதேனும் சிறிய ஆரோக்கியக் கோளாறுகள் ஏற்பட்டாலும், உங்களது எதிர்ப்பு சக்தி அவற்றைச் சரி செய்து விடும். எனவே தைரியமாக இருக்கவும்.  

மாணவர்கள்:

மாணவர்களுக்கு இது சுமாரான மாதமாக இருக்கும். எனினும் கவலை வேண்டாம். நல்ல ஊக்கமும், விரைவில் கற்றுக் கொள்ளும் திறனும் உங்களிடம் நிறைந்திருக்கும். இந்த நல்ல குணங்கள், சிறந்த கல்வி பெற உங்களுக்கு உதவும். உங்களது துணிவும், பல வழிகளில் உங்களுக்குப் பயனளிப்பதாக அமையும்.

சுப தினங்கள் : 4,5,6,9,10,11,22,23      
அசுப தினங்கள் : 2,3,12,13,24,25,26,29,30

பரிகாரம்:

    பகவான் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் மற்றும் ஸ்ரீ ஆதிசேஷன் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
    சந்திரன், குரு, சனி, ராகு, கேது ஆகிய கிரக மூர்த்திகளுக்குப் பூஜை மற்றும் ஹோமம் செய்து வழிபடுதல்.
    ஏழை பெண்களின் திருமணத்துக்கு உதவி செய்தல், மீன்களுக்கு உணவு இடுதல்.


சிம்மம் செப்டம்பர் மாத பொதுப்பலன்கள்:

சிம்ம ராசி அன்பர்களே! இது, அனைத்து வகையிலும் உங்களுக்கு நல்ல வளர்ச்சி தரும் மாதமாக இருக்கும். தொழில் ரீதியாக, பல நன்மை பயக்கக்கூடிய வாய்ப்புகள் உருவாகக்கூடும். பணிபுரிபவர்களுக்குப் பதவியில் முன்னேற்றமும் ஏற்படலாம். இவை வருங்காலத்தில் உங்களுக்கு நல்ல சாதகமும், ஆதரவும் அளிக்கும். கடினமாக உழைத்து, அதிக உற்பத்தித் திறனை, நீங்கள் அடையும் காலம் இது. எனினும் சூழ்நிலைகள், சில சமயங்களில், உங்கள் பொறுமையைச் சோதிக்கலாம். ஆயினும், எளிதில் நம்பிக்கை இழந்து விடாதீர்கள். உங்கள் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும், என்றாலும், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தாயின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பொதுவாக, குடும்ப விஷயங்களில் நீங்கள் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.  

திருமண வாழ்க்கை:

காதல் மற்றும் திருமணத்திற்கு, இது சுமாரான காலமாகும். இந்த நேரத்தில், திருமணமானவர்களுக்குள் பிரிவினைகள் ஏற்படும் சாத்தியம் உள்ளது. எனவே எச்சரிக்கையாக இருக்கவும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள், புண்ணியத் தலங்களுக்குச் சென்று வர, அவர்களுக்குக் திருமணம் கைகூடி வரும் வாய்ப்புள்ளது.

நிதி:

உங்கள் நிதிநிலை சிறப்பாக இருக்கும். செய்தொழிலில் அதிக லாபங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதனால் உங்கள் சேமிப்பைப் பெருக்குவதற்கு இது சரியான நேரம் எனலாம். எதிர்காலத் தேவைகளுக்காக, நீங்கள் சில நிதி திட்டங்களில் முதலீடுகளும் செய்யக்கூடும்.

வேலை:

பணியில் உள்ளவர்கள், புதிய தொழில் நுட்பங்களால் நல்ல அனுபவத்தைப் பெறுவார்கள். உடன் பணியாற்றும் ஊழியர்களும் உங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள். இந்த மாதம் ஒரு சிலருக்கு வேலையில் இடமாற்றம் ஏற்படலாம். அலுவலகத்தில் பல பிரச்சனைகளும் வந்து விலகக்கூடும்.

தொழில்:

தொழில் முன்னேற்றம் வெகுச் சிறப்பாக அமையும். உங்களது துணிச்சலான அணுகுமுறையும், சுதந்திர இயல்பும் உங்கள் தொழில் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். ஆனால், சில நேரங்களில் உங்களுக்கு வெற்றி தாமதமாகக் கிடைக்கலாம். எனினும், நீங்கள் இப்பொழுது நிச்சயமாக வெற்றியடைவதோடு, நீடித்த கௌரவமும் பெறுவீர்கள்.

தொழில் வல்லுநர்கள்:

சிம்ம ராசி தொழில் வல்லுநர்களின் செயல்திறன் மூலம் அவர்களுக்கு நன்மையான பலன்கள் கிடைக்கும். சில தாமதங்கள் ஏற்பட்டாலும், தொழில் முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்குப் பதவி உயர்வு அல்லது புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

ஆரோக்கியம்:

இந்த மாதம் சிலருக்குக் கபம் சம்பந்தப்பட்ட வியாதிகள் ஏற்பட்டு விலகக்கூடும். எண்ணெய் உணவு உட்கொள்வதன் காரணமாக, செரிமானப் பிரச்சினைகளாலும் சிலர் பாதிக்கப்படலாம். இருந்தாலும், பொதுவாக உங்கள் ஆரோக்கியத்திற்கு எந்தக் குறையும் இருக்காது. இப்பொழுது நீங்கள் நல்ல உடல் நிலையுடனேயே இருப்பீர்கள்.

மாணவர்கள்:

மாணவர்களைப் பொறுத்தவரையில், இது ஒரு நல்ல காலமாக அமையும். இந்த நேரத்தில் உங்கள் படிப்பு சீரான போக்கில் செல்லும். எனினும், நண்பர்களுடன் நீங்கள் நல்லுறவை வளர்த்துக் கொள்வது உங்களுக்கு நலம் தரும். மன நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும், உங்களுக்கு நன்மை பயக்கும்.

சுப தினங்கள் : 7,8,12,13,24,25,26.
அசுப தினங்கள் : 1,4,5,6,14,15,27,28.

பரிகாரம்:

    குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் திருக்கடையூர் தேவி அபிராமி வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
    சூரிய பகவான், குரு, சனி, ராகு, கேது போன்ற கிரக மூர்த்திகளுக்குப் பூஜை, ஹோமம் மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
    பாம்புப் புற்றுக்குப் பால் வார்த்தல். கோவில்களில் திருப்பணி செய்தல்.


கன்னி செப்டம்பர் மாத பொதுப்பலன்கள்:

கன்னி ராசி அன்பர்களுக்கு, இந்த மாதம், சுமாரான பலன்கள் நடைபெறலாம். உங்கள் உடல் நலனில் முன்னேற்றம் காணப்படும். தந்தையின் உடலும் நலமாக இருக்கும். பணவரவு நன்றாக இருக்கும். சகோதர வழியில் நல்ல ஆதாயங்களை அடையலாம். வாகனங்கள் வாங்க வாய்ப்பு உண்டாகும். எனினும், திருமண வாழ்க்கையில் தடங்கல்கள் காணப்படலாம். மனைவி, தாய் என இருவரின் உடல் நிலையிலும் கவனம் தேவைப்படலாம். தொழில் சாதாரணமாக நடை பெறும். ஆனால், செய்யும் தொழிலில் லாபங்கள் தடைபடலாம். வேலையில் இடமாற்றங்களும் ஏற்படக்கூடும். பொதுவாக, சிறு கஷ்டங்கள் இடையிடையே வந்து போகலாம். சிலர் குடும்பத்துடன் வெளியூர்ப் பயணங்களும் செல்ல நேரலாம். ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

 திருமண வாழ்க்கை:

இந்த நேரத்தில், காதலர்கள் சிறுது மந்தமாக உணரக்கூடும். சில காதலர்களுக்குள் மனகசப்பும் ஏற்படலாம். எனினும், ஒரு சில காதல் உறவுகள், இப்பொழுது, திருமணத்தில் முடிய வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்குவதற்கும் வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் அக்கறை தேவைப்படலாம்.

நிதி:

உங்கள் வருமானம், உங்களின் அனைத்துப் பொறுப்புகளையும்  நிறைவேற்றுவதற்குப் போதுமானதாக  இருக்கும். சிலருக்கு அரசாங்க வழியில் லாபம் கிடைக்கலாம். தந்தை மூலமாகவும் வருமானங்கள் பெருகும். பணத்தைச் சேமிப்பதற்கான உங்களுடைய ஒவ்வொரு முயற்சியும், இப்பொழுது சுலபமாக வெற்றி பெறக்கூடும்.

வேலை:

இந்த மாதம், உங்கள் பணி, மிக சிறப்பாகவும், நேர்த்தியாகவும் அமையும். உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள வேலைகளில் முறையான கவனம் செலுத்துவதும், தன்னம்பிக்கையுடன் செயல்படுவதும், உங்களுக்கென ஒரு தனி அடையாளத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளத் துணைபுரியும்.

தொழில்:

இந்தக் காலகட்டத்தில், நீங்கள் எந்த வகையான பணியை எடுத்துச் செய்தாலும் அதில் சிறப்பாகச் செயல்படுவீர்கள். எனினும், உங்கள் தொழில் வகையில் சில மனசஞ்சலங்கள் ஏற்படக்கூடும். வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம், அவர்கள் எதிர்பார்ப்புக்களைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப, உங்கள் திட்டங்களை நீங்கள் சிறப்பாகச் செயல்படுத்த முடியும்.

தொழில் வல்லுநர்கள்:

கன்னி ராசி தொழில் வல்லுநர்களுக்கு, இது, பெருமளவு சாதகமான காலமாக இருக்கும். உங்கள் செயல்திறன் காரணமாக, உங்களுக்கு நன்மையான பலன்கள் கிடைக்கக் கூடும். பதவி உயர்வு அல்லது புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. பணியிடத்தில் உங்கள் தனிப்பட்ட திறமைகளை வெளிக்காட்டும் வகையில், நீங்கள் சிறப்பாகச் செயல்படுவீர்கள்.

ஆரோக்கியம்:

உங்கள் உடல்நிலையில் முன்பே ஏதாவது பாதிப்பு இருந்தாலும், இப்பொழுது அது குணமடைந்து, உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்  ஏற்படக்கூடும். உங்கள் வெற்றி மற்றும் சந்தோஷமும், உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். இப்பொழுது நீங்கள், மன அழுத்தம் இல்லாத அமைதியான வாழ்க்கையை அனுபவிக்கலாம்.

மாணவர்கள்:

படிப்பதற்கும், சிறந்த கல்வி அனுபவத்தைப் பெறுவதற்கும், இது உகந்த மாதமாக விளங்கும். உங்கள் திறந்த மனமும், பரந்த மனப்பான்மையும், உங்கள் தனிப்பட்ட திறமைகளையும், நற்பெயரையும் மேம்படுத்த உதவும். உங்கள்  செயல்திறனால் பெற்றோர்களும் மன மகிழ்ச்சியடைவார்கள்.

சுப தினங்கள் : 1,9,10,11,14,15,27,28
அசுப தினங்கள் : 2,3,7,8,16,17,29,30

பரிகாரம்:

    ஸ்ரீ குருவாயூர் கிருஷ்ணர் மற்றும் சித்தர்கள் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
    குரு, சனி, ராகு, கேது கிரக மூர்த்திகளுக்குப் பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
    ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவுதல். ஆதரவற்ற அனாதைக் குழந்தைகளுக்கு உணவு அளித்தல்.


துலாம் செப்டம்பர் மாத பொதுப்பலன்கள்:

துலாம் ராசி அன்பர்களுக்கு, இது நன்மைகள் விளையும் மாதமாக அமையும். தன வரவு தாராளமாக இருக்கும். தொழில் துறையில் நீங்கள் அதிக லாபங்களைப் பெறலாம். எனினும் இடையிடையே, தொழில் சற்றே மந்தமாகவும் இருக்கக் கூடும். இளைய சகோதரர்களால் நன்மைகள் ஏற்படலாம். சிலருக்குத் தாய் வழியில் சொத்துக்கள் வந்தடையலாம். அலுவலகத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வருவதற்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. கணவன், மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். எனவே இல்லறம் இனிக்கும். தந்தையின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படும். அவருடனான கருத்து வேறுபாடுகளும் நீங்கக்கூடும். சிலர், வெளியிடங்களுக்கு உல்லாசப் பயணங்கள் செல்லக்கூடும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படலாம். எனினும், காதல் விவகாரங்களை இந்த மாதம் தள்ளிப் போடுவது நல்லது. ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.  

திருமண வாழ்க்கை:

உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உறவு வலுவாக இருக்கும். அவருடன் நீங்கள், நேரத்தை இனிமையாகச் செலவிட்டு மகிழ்வீர்கள். ஆனால், உங்களில் சிலரது தவறான அணுகுமுறை காரணமாக, திருமணத்துக்கான சில நல்ல வரன்களை நீங்கள் இழக்க நேரிடலாம். எச்சரிக்கை தேவை.  

நிதி:

நிதிநிலை சிறப்பாக இருக்கும். தேவைப்படும் நேரத்தில் நண்பர்களிடமிருந்தும் நீங்கள் நிதி உதவி பெற முடியும். இப்பொழுது உங்கள் செலவினங்களைக் கவனமாகத் திட்டமிடுவது அவசியம். மற்ற செலவுகளைக் குறைப்பதன் மூலம், உங்கள் கடன்களையும், உங்களால் தீர்த்துவிட முடியும்.

வேலை:

பணியில் இருப்பவர்களுக்கு இது, சிறந்த முன்னேற்றமான காலமாக இருக்கும் எனலாம். உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப உங்கள் பணி அமையும். உங்கள் நேர்மையும், அர்ப்பணிப்பும் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். அலுவலகத்தில் உங்கள் மதிப்பை நிரூபிக்க ஒரு நல்ல வாய்ப்பு உங்களைத் தேடி வரக்கூடும்.

தொழில்:

இந்த மாதம், உங்கள் தொழில் முன்னேற்றம், பொதுவாக, உங்கள் திறமையைச் சார்ந்தே அமையும். உங்கள் விடாமுயற்சி, உங்கள் தொழில் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். இப்பொழுது நீங்கள் பல தடைகளைக் கடந்து வெற்றி பெறக்கூடும். இதன் மூலம் உங்கள் தனித்தன்மையும் வெளிப்படும்.

தொழில் வல்லுநர்கள்:

துலா ராசி தொழில் வல்லுநர்கள், இந்தக் காலகட்டத்தில், பல சாதகமான பலன்களை எதிர்பார்க்கலாம். இதன் மூலம், உங்கள் எதிர்பார்ப்புக்களையும் நீங்கள் நிறைவேற்றிக் கொள்ளலாம். உங்கள் வேலையில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவது, உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி சிறப்பாகப் பணியாற்ற உதவும். நேரத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப உங்கள் திட்டங்களைத் தீட்டுவதும், நன்மை தரும்.

ஆரோக்கியம்:

உங்கள் ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும். சிலருக்குப் பதட்டம் காரணமாகக், கால் மூட்டுக்களில் வலி ஏற்படலாம். இந்த நேரத்தில், நீங்கள் ஒரு கண்டிப்பான உணவுக் கட்டுப்பாட்டைப் பராமரிப்பது அவசியம். ஆரோக்கியத்தைப் பேண, அவ்வப்பொழுது, தகுந்த மருத்துவ ஆலோசனை பெறுவதும் நல்லது.

மாணவர்கள்:

கல்வியில் கடும் முயற்சிக்குப் பின்னரே, மாணவர்களுக்குப் பலன் கிடைக்கக்கூடும். நீங்கள் நடைமுறையில் பாடங்களை நன்கு தெரிந்து கொள்வீர்கள். இருப்பினும், அதை உரிய முறையில் வெளிப்படுத்தத் திணறக்கூடும். இந்த நேரத்தில், தகவல் பரிமாற்றம், ஒருமித்த கவனம் மற்றும் கூடுதல் நேரம் எடுத்துப் படிப்பது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பது, உங்கள் கல்வி முயற்சிகளுக்கு நன்மை தரும்.

சுப தினங்கள் : 6,7,10,11,24,25
அசுப தினங்கள் : 4,5,12,13,26,27,28

பரிகாரம்:

    அன்னை ஸ்ரீ மஹாலக்ஷ்மி மற்றும் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
    சனி, குரு, ராகு, கேது கிரக மூர்த்திகளுக்கு ஹோமம், பூஜை செய்து வழிபடுதல்.
    பசு மற்றும் கால்நடைகளுக்கு உணவு அளித்தல். பெற்றோர்களுக்குப் பணிவிடை செய்து, அவர்கள் ஆசீர்வாதம் பெறுதல்.


விருச்சிகம் செப்டம்பர் மாத பொதுப்பலன்கள்:

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த மாதம், நல்லவை, அல்லாதவை என இரண்டும் கலந்த பலன்களை நீங்கள் எதிர்பார்க்கலாம். நீங்கள் மேற்கொள்ளும் செயல்கள் பலவற்றிலும், சிறு பிரச்சினைகளையும், தடங்கல்களையும் சந்திக்க நேரிடலாம். இருப்பினும் இறுதி வெற்றி உங்களுடையதாகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிறு உடல் நிலை பாதிப்பு எனினும், சுய மருத்துவம் பார்க்காமல், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. யாரிடமும், எந்தக் காரணம் கொண்டும் விரோதம் பாராட்ட வேண்டாம். உங்கள் பொருளாதார நிலை நிறைவு தரும். கணவன் மனைவிடையே ஏதேனும் மனக்கசப்பு தோன்றினாலும், பொதுவாக, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சகோதர சகோதரிகளிடம் முரண்பாடு ஏற்பட்டாலும், அவர்களால் ஆதாயம் உண்டு. சில நேரங்களில் உங்களுக்கு மனச் சோர்வு வந்து நீங்கக்கூடும். ஆனால், தன வரவு உண்டு. வேலை மற்றும் தொழிலில் உங்கள் தனித்திறன் வெளிப்படும். சிலர், பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றையும் எதிர்பார்க்கலாம். ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.  

திருமண வாழ்க்கை:

காதல் விவகாரங்களில் கவனம் தேவை. புதிய காதல் முயற்சிகளைத் தவிர்ப்பதும் நல்லது. திருமண வாழ்க்கையில் சிறு கருத்து வேறுபாடுகள் எழுந்தாலும், பொருளாதார ரீதியில், குடும்பம், மேன்மையடையும். வாழ்க்கைத் துணை வழியில் தன வரவும் ஏற்படலாம். இந்த நேரத்தில், குடும்ப விவகாரங்களை நாசூக்காகக் கையாள்வது நல்லது.

நிதி:

உங்கள் பொருளாதார நிலையில், மாத முற்பகுதியில் தட்டுப்பாடு இருந்தாலும், பிற் பகுதியில் நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடும். உங்கள் குடும்ப முன்னேற்றதிற்காகவும், பொருளாதார தன்னிறைவுக்காகவும், தேவையான முயற்சிகளை நீங்கள் மேற் கொள்வீர்கள். புதிய அணுகுமுறைகளையும் செயல் படுத்துவீர்கள். இதனால் நிதிநிலை மேம்படக்கூடும். சேமிப்பும் அதிகரிக்கலாம்.

வேலை:

இந்த மாதம் நீங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்துவீர்கள். உங்கள் தனித் திறமையை முழுமையாக பயன்படுத்திப் புகழ் பெறுவீர்கள். உயரதிகாரிகளும், சக ஊழியர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இருப்பினும் மறைமுக எதிர்ப்புகளால், நீங்கள் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம்.

தொழில்:

இந்த மாதம் தொழிலில் உங்கள் கை ஓங்கக்கூடும். உங்கள் செயல் திறனாலும், புதிய அணுகுமுறையாலும், செயற்கரிய செயல்களைச் செய்து, நீங்கள் சாதனையும் படைக்கக்கூடும். இதனால் உங்கள் புகழ், அந்தஸ்து, செல்வாக்கு போன்றவை உயரக்கூடும். உயரதிகாரிகளின் நம்பிக்கைக்கும் நீங்கள் பாத்திரமாவீர்கள். உங்களை நம்பி, அவர்கள், புதிய பொறுப்புக்களையும் ஒப்படைக்கலாம்.

தொழில் வல்லுநர்கள்:

விருச்சிக ராசி தொழில் வல்லுநர்களுக்கு, இது மிகவும் சாதகமான காலம் எனலாம். இப்பொழுது உங்கள் திறமையை முழுமையாகப் பயன்படுத்தி நீங்கள் நன்கு முன்னேறக்கூடும். உங்கள் பணியில் தனி முத்திரையும் பதிக்கலாம். மற்றவர்களால் ‘முடியாது’ என்று கைவிடபட்ட சில செயல்களையும், இந்த நேரத்தில் உங்களால் எளிதாகச் செய்ய இயலும் எனலாம்.

ஆரோக்கியம்:

இந்தக் காலகட்டத்தில் உங்களுக்கு அடிக்கடி ஆரோக்கிய குறைபாடு ஏற்படலாம். உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கக்கூடும். உங்களுக்கு எந்த வித உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டாலும், சுய மருத்துவம் பார்ப்பதைத் தவிர்த்து, உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. வீணான கோபத்தைத் தவிர்ப்பதால், அதனால் ஏற்படும் உடல் பாதிப்புக்களையும் நீங்கள் தவிர்த்து விடலாம்.

மாணவர்கள்:

மாணவர்களுக்குப் படிப்பில் கவனக்குறைவு ஏற்படலாம். பாடங்களைத் தள்ளிப் போடாமல், அவற்றை உடனடியாகப் படிப்பது நல்லது. உங்கள் உடல் ஆரோக்கியம் உங்கள் கல்வியைப் பாதிக்காமல் பார்த்து கொள்வதும் அவசியம். எனினும், இப்பொழுது உங்களுக்கு, ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஆதரவு உண்டு. மேலும் யோகா, தியானம் பயில்வது கல்வியில் சிறந்து விளங்க உறுதுணையாக இருக்கும்.

சுப தினங்கள் :  2,4,5,6,7,14,15,19,21,22,23,26,27,28,29
அசுப தினங்கள் : 3,6,10,11, 12, 13,16, 17, 18, 20, 24, 25,30    

பரிகாரம்:

    ஸ்ரீ முருக பெருமான் மற்றும் ஸ்ரீ ஆதிசேஷன் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
    செவ்வாய், சனி, குரு, ராகு, கேது கிரக மூர்த்திகளுக்குப் பூஜை மற்றும் ஹோமம் செய்து வழிபடுதல்.
    முருகப் பெருமான் ஆலயத்தில் சர்க்கரை பொங்கல் தானம் செய்தல். பாம்புப் புற்றுக்குப் பால் வார்த்தல்.


தனுசு செப்டம்பர் மாத பொதுப்பலன்கள்:

தனுசு ராசி அன்பர்களுக்கு இந்த மாதம், ஒரு நற்காலமாக அமையும். சோதனைகள் பல வந்தாலும், நீங்கள் சாதனை படைக்கும் நேரம் இது எனலாம். உங்கள் ஆற்றலை நீங்களே புரிந்து கொள்வீர்கள். வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படலாம். பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவற்றுக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். தந்தை வழியில் அனுகூலம் உண்டு. தாய் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு. சகோதர, சகோதரிகளாலும் நன்மை விளையலாம். சிலர், புதிய வீடு, சொத்து, வாகனம் வாங்கும் சூழல் உருவாகும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகளும் சாதகமாகும். குழந்தைகளாலும் மகிழ்ச்சி உண்டாகும். ஆனால், கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கக்கூடும். பொருளாதார நிலையிலும் ஏற்ற, இறக்கங்கள் காணப்படலாம். குடும்ப விஷயங்களில் கவனம் தேவை. வீண் பேச்சைத் தவிப்பது நல்லது. ஆன்மீகப் பயணங்கள் செல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.  

திருமண வாழ்க்கை:

புதிய காதல் முயற்சிகள் வெற்றியடையக் கூடும். காதலர்களுக்கிடையே அன்பும், நட்பும் அதிகரிக்கும். ஆனால், கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கலாம். தம்பதிகள், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வதினால், வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

நிதி:

நிதி சார்ந்த விஷயங்களில் ஏற்ற, இறக்கங்கள் காணப்படும். எதிர்பாராத வீண் செலவுகளும் ஏற்படலாம். எதிர்பாராத பண இழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளதால், பண விஷயங்களில் யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். எனினும், நீண்ட நாட்களாக உங்களுக்கு வர வேண்டிய பணம், இப்பொழுது கைக்கு வந்து சேரலாம்.

வேலை:

வேலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உங்கள் பணிகளும், உயரதிகாரிகளால் பாராட்டப்படும். சக ஊழியர்களும் உங்களுக்குச் சாதகமாக இருப்பார்கள். இருப்பினும், மிகவும் வெளிப்படையாகப் பேசுவதைத் தவிர்க்கவும். உங்களைப் பற்றிய விமர்சனங்களையும் கண்டு கொள்ள வேண்டாம்.

தொழில்:

தொழிலில் நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். உங்கள் செயல்பாடுகள், புதிய நம்பிக்கையை விதைக்கும். புதிய வாய்ப்புக்களும் உங்களைத் தேடி வரக்கூடும். உங்கள் புகழ், அந்தஸ்து, செல்வாக்கு உயரும். உயரதிகாரிகளின் நம்பிக்கைக்கு, நீங்கள் பாத்திரமாவீர்கள். உங்களை நம்பி புதிய பொறுப்புகளும் ஒப்படைக்கப்படலாம்.

தொழில் வல்லுநர்கள்:

தனுசு ராசி தொழில் வல்லுநர்களுக்கு, இது பொற்காலம் எனலாம். இப்பொழுது நீங்கள் தொட்டது எல்லாம் துலங்கக் கூடும். உங்கள் தொழில் நுட்ப அறிவைப் புதிய வகையில் பயன்படுத்தி, நீங்கள் வெற்றி பெறுவீர்கள். மற்றவர்கள் வியக்கும் வண்ணம், பல புதுமைகளும் நீங்கள் புகுத்தும் வாய்ப்புள்ளது. உங்கள் துறையின் மீதான, உங்களது ஆளுமை, இந்த நேரம் நன்கு வெளிப்படலாம்.

ஆரோக்கியம்:

உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும். நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதைகள் பலவற்றிற்கும் கூட, இப்பொழுது தீர்வு கிடைக்கலாம். எனினும் சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்சினைகள் வந்து நீங்கக்கூடும். அதிகக் காரம் அல்லது உஷ்ணமான உணவுப் பொருள்களைத் தவிர்ப்பது நல்லது.

மாணவர்கள்:

இந்த மாதம் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடும். உங்கள் அறிவுத் திறனும், நினைவாற்றலும் மேம்படக்கூடும். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். வாழ்வை முன்னேற்றக் கூடிய நல்ல குரு ஒருவர், உங்களில் சிலருக்குக் கிடைக்கலாம். இப்பொழுது, கல்வி மற்றும் விளையாட்டு என இரண்டிலும் நீங்கள் பங்கு பெறக்கூடும்.

சுப தினங்கள் : 2,4,5,6,7,8,9,12,13,19,21,22,23,26,27,28,29
அசுப தினங்கள் : 1,3,10,11, 14,15,16,17,18,20,24,25,30

பரிகாரம்:

    பகவான் ஸ்ரீ லக்ஷ்மீ நரசிம்மர் மற்றும் குரு பகவான் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
    சனி, குரு, ராகு, கேது கிரக மூர்த்திகளுக்குப் பூஜை, ஹோமம் செய்து வழிபடுதல்.
    ஏழை பெண்களின் திருமணத்துக்கு உதவி செய்தல். பசுவுக்கு அகத்திக் கீரை அளித்தல்.


மகரம் செப்டம்பர் மாத பொதுப்பலன்கள்:

மகர ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் சுமாரான பலன்களையே எதிர்பார்க்க முடியும். சில நேரங்களில் உங்களுக்கு மன குழப்பமும், உங்களது செயல்களில் தடுமாற்றமும் ஏற்படலாம். எனவே, அவசரப்பட்டு எந்த ஒரு முக்கிய முடிவையும் எடுக்காமல், நிதானமாகச் செயல்படுவது அவசியம். புதிய விஷயங்களைத் தொடங்கவோ, அவற்றில் தலையிடவோ வேண்டாம். வெளியூர்ப் பயணங்களையும் தவிர்ப்பது நல்லது. உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிறு உடல் உபாதைகள் வந்து நீங்கும் வாய்ப்புள்ளது. தந்தையின் உடல்நிலையிலும் பதிப்பு உண்டாகலாம். எதிர்பாராத செலவினங்களும் ஏற்படலாம். பொதுவாக உங்கள் முயற்சிகளில் தடைகளும், பிரச்சினைகளும் எற்படலாம். எனினும், கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். ஆனால், காதல் விவகாரங்களில் கவனம் தேவை. தாய் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு. வீடு, வாகன சேர்க்கைக்கான முயற்சிகளும் கைகூடலாம். உங்களில் சிலர் ஆலயங்களுக்குப் புனித யாத்திரை செல்லக்கூடும். ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.  

காதல் மற்றும் திருமண வாழ்க்கை:

காதலர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகளும், பிரச்சனைகளும் வந்து நீங்கக்கூடும். இந்த நேரத்தில் புதிய காதல் முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் காதலில், மற்றவர்களின் தலையீட்டையும் தவிர்க்கவும். எனினும், மணவாழ்க்கையில் தம்பதிகள், ஒருவருக்கொருவர் இணக்கமாக நடந்து கொள்வார்கள்.

நிதி:

பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமான நிதிவசதி, உங்களிடம் இருக்கும். எனினும் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் கொடுக்கல், வாங்கல் போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது. உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கவும், சேமிப்புகள் குறையவும் வாய்ப்புள்ளது. எனவே எச்சரிக்கையாக இருக்கவும்.  

வேலை:

இந்த மாதம் உங்கள் வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டு. பணியில் எழும் அனைத்து சிக்கல்களையும், நீங்கள் துணிச்சலுடன் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். உங்கள் உழைப்பும் உயரதிகாரிகளால் நன்கு மதிக்கப்படும். எனினும் சக ஊழியர்களுடன் வெளிப்படையாகப் பேசுவதைத் தவிப்பது நல்லது.

தொழில்:

உங்கள் தொழிலில் பல முன்னேற்றங்கள் ஏற்படக்கூடும். துறை சார்ந்த நிபுணர்களிடமிருந்து, உங்களுக்கு சில நல்ல ஆலோசனைகளும் கிடைக்கலாம். உங்கள் நிர்வாகத் திறமையால், அனைத்துப் பொறுப்புகளிலும் திறம்படச் செயல்பட்டு, நீங்கள் சாதனை படைப்பீர்கள். தொழிலில் ஒரு உயர்ந்த நிலையும் உங்களைத் தேடி வரக்கூடும்.

தொழில் வல்லுநர்கள்:

மகர ராசி தொழில் வல்லுநர்கள், இந்த மாதம் பல சாதனைகளைப் படைக்கும் வாய்ப்புள்ளது. உங்கள் துறையில் நீங்கள் புதுமைகளைப் புகுத்தி வெற்றி பெறக்கூடும். முக்கியமானவர்கள் சிலரின் ஆலோசனையும், வழிகாட்டுதலும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். உங்கள் உழைப்பும், அர்ப்பணிப்பும் பலரின் பாராட்டையும் பெறக்கூடும்.

ஆரோக்கியம்:

இந்தக் காலகட்டத்தில், உங்களில் சிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உருவாக வாய்ப்புள்ளதால், உணவுக் கட்டுப்பாடு அவசியம். யோகா, தியானம் போன்ற பயிற்சிகளும் நன்மை தரும். எனினும், நீண்ட நாளாக உடல் பாதிப்படைந்த சிலரது உடல்நிலையில், இப்பொழுது நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது.

மாணவர்கள்:

படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டு. புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதிலும், உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் கடின உழைப்பின் பலனும் உங்களுக்குக் கிடைக்கக்கூடும். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஆதரவும் கிடைக்கும். எனினும், நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கவும்.

சுப தினங்கள் : 2,4,5,6,7,8,9,12,13,14,15,19,21,22,23,26,27,28,29
அசுப தினங்கள் : 1, 3, 10, 11, 16, 17, 18, 20, 24, 25, 30

பரிகாரம்:

    ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் சனி பகவான் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
    சனி, குரு, ராகு, கேது கிரக மூர்த்திகளுக்குப் பூஜை, ஹோமம் செய்து வழிபடுதல்.
    வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுதல்.


கும்பம் செப்டம்பர் மாத பொதுப்பலன்கள்:

கும்ப ராசி அன்பர்கள், இந்த மாதம், எதிலும் பொறுமையுடனும், கவனத்துடனும் இருப்பது அவசியம். தற்பொழுது உங்களுக்குத் தைரியம் ஒன்றே துணை எனலாம். வீண் செலவுகளைத் தவிர்ப்பது அவசியம். இந்த நேரத்தில், யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். பண இழப்பு, துரோகம், ஏமாற்றம் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதால், மிகுந்த எச்சரிக்கை தேவை. உங்களுக்கு, சில மறைமுக எதிர்ப்புக்களும் வந்து நீங்கலாம். எந்த விஷயத்தையும் கூர்ந்து கவனித்து, சாம, தான, பேத, தண்ட உபாயங்களைக் கையாள்வது நல்லது. பொருளாதார நிலையில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்படலாம். தாய், தந்தை மற்றும் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கலாம். குழந்தைகள் தொடர்பாகவும் கவனம் தேவை. ஆயினும், குடும்பத்தினரால் மகிழ்ச்சி உண்டாகும். வேலை மற்றும் தொழில் துறையில் அமைதி நிலவும். சிலர், புனிதத் தலங்களுக்கு, ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்ளலாம். ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.  

திருமண வாழ்க்கை:

காதலர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகளும், பிரச்சனைகளும் வந்து நீங்கலாம். இந்த நேரத்தில், புதிய காதல் முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. எனினும், இல்லற வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொண்டு, விட்டுக் கொடுத்துச் செல்வார்கள். புதிய திருமண முயற்சிகள் கைகூடும் வாய்ப்புள்ளது.

நிதி:

உங்கள் பொருளாதார நிலை மந்தமாக இருக்கக் கூடும். உங்கள் பழைய சேமிப்புகள் கரையலாம். குடும்பத் தேவைகளுக்காக, சிலர் கடன் வாங்கும் சூழ்நிலையும் ஏற்படலாம். இருப்பினும், உரிய முயற்சிகளுக்குப் பின்னர், தேவையான பண வரவு கிடைக்கக் கூடும். குடும்பத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, நீண்ட நாள் சேமிப்பு போன்றவற்றில் முதலீடு செய்வது நல்லது.

வேலை:

உங்கள் பணியில் அமைதி நிலவும். எனினும், வீணான விஷயங்களில் தலையிட வேண்டாம். சக ஊழியர்களிடம் வெளிப்படையாகப் பேசுவதையும் தவிர்க்கவும். உயரதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்து கொள்வதும் வேண்டாம். இது போன்றவற்றைத் தவிர்த்து, உங்கள் பணிகளில் கண்ணும் கருத்துமாக இருப்பது நலம் தரும்.

தொழில்:

இந்த நேரத்தில் நீங்கள், தொழிலில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. புதிய முயற்சிகளையும், முதலீடுகளையும் தவிர்த்து, தற்போதுள்ள பணிகளில் கண்ணும், கருத்துமாகச் செயல்படுவதும் அவசியம். ‘தன்னம்பிக்கையே வெற்றி தரும்’ என்பதை நீங்கள் உணரும் காலம் இது எனலாம்.

தொழில் வல்லுநர்கள்:

மகர ராசி தொழில் வல்லுநர்களுக்கு இந்த மாதம், சராசரியான காலமாக இருக்கும். உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் செயல் திறனால், உங்களுக்கு நன்மை விளையக்கூடும். உங்களது செயல்பாடும், உங்களுடைய தனிப்பட்ட திறமை வெளிப்படும் வகையில் அமைந்திருக்கும். இருப்பினும், இந்த நேரத்தில் உங்களிடம், பொறுமையும், விழிப்புணர்வும் தேவை.

ஆரோக்கியம்:

இந்த மாதம் உங்கள் உடல்நலம் குறித்த சிறு பிரச்சனைகள் வந்து நீங்கக்கூடும். தினந்தோறும் தவறாமல், சத்துள்ள உணவுப் பொருட்களையும், இயற்கை உணவுகளையும் உட்கொள்வது நலம் தரும். வீண் பயம், எதிர்மறை சிந்தனைகள் போன்றவற்றைத் தவிர்த்து, நேர்மறை என்ணங்களை வளர்த்துக் கொள்வதால், மன ஆரோக்கியமும், உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

மாணவர்கள்:

இந்த மாதம், மாணவர்களுக்குக் கல்வியில் அதிக கவனம் தேவை. இப்பொழுது நீங்கள் சோம்பலைத் தவிர்ப்பதும் அவசியம். உங்கள் உடல் ஆரோக்கியம், உங்களது படிப்பைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்வதும் முக்கியம். நண்பர்களின் உதவி உங்களுக்குக் கிடைக்கும். எனினும், தேவையற்ற நட்பிலிருந்து விலகி இருப்பது நன்மை தரும். கடின உழைப்பு மட்டுமே கல்வியில் உயர்வு தரும் என்பதை நீங்கள் உணரும் காலம் இது.

சுப தினங்கள் : 2,4,5,6,7,8,9,12,13,14,15,21,22,23,26,27,28,29
அசுப தினங்கள் : 1, 3, 10, 11, 16, 17, 18, 19, 20, 24, 25, 30.

பரிகாரம்:

    ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ ஆதிசேஷன் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
    குரு, சனி, ராகு, கேது கிரக மூர்த்திகளுக்குப் பூஜை, ஹோமம் செய்து வழிபடுதல்.
    காக்கைக்கு அன்னம் இடுதல், பாம்புப் புற்றுக்கு பால் வார்த்தல்.


மீனம் செப்டம்பர் மாத பொதுப்பலன்கள்:

மீன ராசி அன்பர்களே! பொதுவாக இது உங்களுக்கு ஒரு நல்ல மாதமாக இருக்கும். ஆனால், தொழில் விஷயங்களில் மட்டும், நீங்கள் சிறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். எனவே, வேலை, தொழில் தொடர்பான நடவடிக்கைகளில் அதீத தன்னம்பிக்கையைத் தவிர்க்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். இருப்பினும் கோபமாகப் பேசுவது, கடும் வார்த்தைகளைப் பயன்படுத்துவது போன்றவற்றைத் தவிர்ப்பது அவசியம். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வதும் நல்லது. உங்களுக்குப் பலவகையிலும் தன வரவு உண்டு. முதலீடுகளும் லாபம் தரக்கூடும். வெளியூர்ப் பயணங்களாலும் நன்மை விளையக்கூடும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். சிலருக்கு முக்கியப் பிரமுகர்களின் நட்பும் கிடைக்கலாம். எனினும், வீடு, சொத்து, வாகன விஷயங்களில் கவனம் தேவை. உங்களில் சிலர், வாகனத்தைப் பழுது பார்த்து சரி செய்யக்கூடும். குழந்தைகள் உடல் நிலையில் பாதிப்பு உண்டாகலாம். மருத்துவ செலவுகளும் ஏற்படலாம். ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.  

திருமண வாழ்க்கை:

காதலர்களுக்கிடையே மனக் கசப்புகள் வந்து நீங்கக்கூடும். எனவே, வீண் விவாதங்களைத் தவிர்ப்பது அவசியம். புதிய காதல் முயற்சிகளும், இப்பொழுது வேண்டாம். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும் வாய்ப்புள்ளது. ஆகவே, தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, அனுசரித்துச் செல்வது நல்லது.

நிதி:

பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பண வரவுகளும் உண்டு. பரம்பரை சொத்து விஷயங்கள் சாதகமாகலாம். நீங்கள், உங்கள் குடும்பத்தினர், குழந்தைகள் ஆகிய அனைவரின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, நீங்கள் புதிய சேமிப்பு யூகங்களை அமைத்துத் செயல்படக்கூடும்.

வேலை:

பணி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. உங்களைப் பற்றிய தவறான வதந்திகளும், விமர்சனங்களும் பரவக்கூடும். சக ஊழியர்களும் உங்களுக்கு எதிராகச் செயல்படலாம். உங்களைப் பற்றிய சில தவறான தகவல்கள், உயரதிகாரிகளைச் சென்றடையும் வாய்ப்பும் உள்ளது. எனவே, பணிகளை சரியாக திட்டமிட்டு செயல்பட்டால் நீங்கள் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

தொழில்:

தொழில் நடவடிக்கைகளில் கவனத்துடன் இருப்பது நல்லது. கூட்டாளிகள் மற்றும் பணியாட்களால் தேவையற்ற பிரச்சினைகளும், விரையங்களும் ஏற்பட வாய்ப்புள்ளதால், அவர்களைக் கண்காணிப்பில் வைத்துக் கொள்வது நல்லது. இந்த நேரத்தில், நீங்கள் புதிய தொழில் முயற்சிகளைத் தவிர்ப்பதும் அவசியம்.

தொழில் வல்லுநர்கள்:

மீன ராசி தொழில் வல்லுநர்களுக்கு இந்த மாதம், சாதாரணமான ஒன்றாக இருக்கக் கூடும் உங்கள் தனித்திறன், செயல்பாடு போன்றவற்றை நிலை நிறுத்திக் கொள்வதற்காக, நீங்கள் கடுமையாகப் போராடுவீர்கள். எதிலும் உங்களுக்கு, இப்பொழுது, பொறுமை தேவைப்படும். எனினும், சேவை மனப்பான்மையுடன் நீங்கள் செயல்படும் பொழுது, உங்களுக்கு வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது.

ஆரோக்கியம்:

உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. மனக்கவலை, வீண் குழப்பம், எதிர்காலம் பற்றிய பயம் ஆகியவற்றைத் தவிர்க்கவும். உங்கள் மனப் பிரச்சினைகளே உடல் பிரச்சினைகளாக வெளிப்படலாம் என்பதால், எச்சரிக்கை தேவை. மனதைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதும், யோகா, தியானம் பயில்வதும் நலம் தரும்.

மாணவர்கள்:

இந்த மாதம் மாணவர்கள், படிப்பில் தடைகளையும், பிரச்சனைகளையும் சந்திக்கக்கூடும். உங்கள் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. நண்பர்களுடன் ஏதாவது பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால், அதிலும் கவனத்துடன் இருப்பது அவசியம். எனினும், ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் அன்பும், வழிகாட்டுதலும் உங்களுக்கு உண்டு.

சுப தினங்கள் : 2,4,5,6,7,8,9,12,13,14,15,19,22,23,26,27,28,29
அசுப தினங்கள் : 1, 3, 10, 11, 16, 17, 18, 20, 21, 24, 25, 30

பரிகாரம்:

    திருச்செந்தூர் ஸ்ரீ முருகப்பெருமான் மற்றும் சித்தர்கள் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
    குரு, சனி, ராகு, கேது கிரக மூர்த்திகளுக்குப் பூஜை, ஹோமம் செய்து வழிபடுதல்.
    மீன்களுக்கு உணவு இடுதல், பாம்புப் புற்றுக்குப் பால் வார்த்தல்.