Advertisement Contact

time bank திட்டத்தை நடைமுறைப் படுத்தும் சுவிஸ்,

சுவிஸ் நாட்டில் இருக்கும் நீங்கள் இதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்,
தொகுப்பு-மார்க்கண்டு தேவராஜா(LLB-MP-TGTE)Mayuraagoldsmith-Zurich-Switzerland.சுவிஸ் நாட்டில் டைம் பேங்க் திட்டம் நடைமுறையில் இருப்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்,

சுவிஸ் நாட்டில் இருக்கும் நீங்கள் இதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள், சுவிஸ் பேங்கில் பணம் மட்டும் டெப்பாசிட் செய்யமுடியும் என்று மட்டும் நினைக்காதீர்கள் உங்களது நேரத்தயும் வங்கியில் டெபாசிட் செய்து உங்களுக்கு தேவையான நேரத்தில் எடுக்கலாம் என்பது உலக மக்கள் அனைவருக்கும் தெரியும் உங்களுக்குத் தெரியுமா தெரிந்து கொள்ளுங்கள்.  

ஆனால் சுவிட்சர்லாந்து தேசத்தில் காலத்தையும் நேரத்தயும் டெபாசிட் செய்து தேவை படும்போது எடுக்கலாம் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்

ஆம் சுவிஸர்லாந்து தேசத்தில் #TimeBank என்று ஒரு முதியோர் பென்ஷன் திட்டத்தை சுவிஸ்  நாட்டுஅரசாங்கம் (Swiss Federal Ministry of Social Security) நடத்துகிறது.

இந்த வங்கியில் நாம் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் போது நம்முடைய நேரத்தை டெப்பாசிட் செய்யலாம். ஆச்சிரியமாக இருக்கிறதா?

ஆம் நாம் ஆரோக்கியமாக இருக்கும் போது Swiss Federal Ministry of Social Securityயில் கணக்கு ஆரம்பித்து நம்முடைய Free Timeயை டெப்பாசிட் செய்யலாமாம்.  பிறகு நமக்கு தேவைப் படும் போது நீங்கள் சேமித்த அந்த Timeயை எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம்.

நீங்கள் வயோதிப காலங்களில் ஊய்வூதியம் பெற்றாலும் இந்த நேர வங்கியில் ஒரு கணக்கைத் திறந்து உங்களால் முடிந்தவரை முடியாதவர்களுக்கு இலவசமாக உதவுவது குளிப்பாட்டுதல் ஆடை அணிவித்தல் உணவு ஊட்டுதல்  போனற்ற உதவிகளுக்கு எந்தவித கட்டணமும் இன்றி இலவசமாக உதவுதல்

இப்படி நீங்கள் செய்யும் உதவியின் நேரம் நேர வங்கியில் உங்களது கணக்கில் சேமிக்கப்படும் உங்களுக்கு இயலாத நேரம் வந்தால் இந்த நேர வங்கியில்  கணக்கு வைத்திருக்கும் இன்னொருவரை நேரவங்கி உங்களுக்கு  உதவிக்கு நியமிக்கும்.

எனக்குத் தெரிந்த ஒருவர் ஒரு 67 வயதான பெண்மணியின் வீட்டில் வாடகைக்கு இருந்தார் அந்த வீட்டின் வயதான ஓய்வு பெற்ற பெண்  ஆசிரியை. தேவையான அளவுக்கு பென்ஷன் பணம் வாங்குபவர்.

அதற்கு மேல் நண்பர் கொடுக்கும் வீட்டு வாடகை வேறு.  இதை வைத்து அவர் நினைக்கும் விதம் எந்த பணகஷ்டமும் இல்லாமல் வாழ்க்கை நடத்த முடியும்.

ஆனால் அவர் தினமும் ஒரு 87 வயதான முதியவர் வீட்டிற்கு சென்று முதியவருக்கும் வீட்டுக்குமான பராமரிப்பு வேலை செய்கிறார்.  அதாவது அவருக்கு தேவைபடும் உதவிகளை செய்கிறார்.  அவருடன் உரையாடுகிறார்.  

அவருக்கு தேவைபடும் போது மருத்துவர்களுடன் தொடர்பு கொள்ளவும், மருந்துகள் வாங்கவும் உதவி செய்கிறார். சுருக்கமாக சொன்னால் தினமும் இரண்டு மணிநேரம் அந்த முதியவர் வீட்டில் வேலை செய்கிறார்.

அந்த முதியவர் உங்கள் உறவினரா இல்லை அவருக்கு சம்பளத்திற்காக வேலை செய்கிறீர்களா என்று கேட்டேன்.  

இரண்டுமில்லை அந்த முதியவர் என் உறவினருமில்லை நான் அவரிடம் சம்பளமும் வாங்கவில்லை என்ற அவரது பதில் எனக்கு ஆச்சிரியத்தை அளித்தது.

பிறகு அவரே அதை விளக்கினார் நான் இப்பொழுது ஆரோக்கியமாக இருக்கிறேன்.  என்னால் இந்த மாதிரி வேலைகளை செய்ய முடிகிறது.  எனவே இந்த மாதிரி வேலைகளை செய்து என்னுடைய நேரத்தை சேமித்து வைத்து கொள்கிறேன்.  

நாளை எனக்கு இந்த நேரம் தேவைபடும் போது எடுத்து உபயோபடுத்திக் கொள்வேன்.  நான் Swiss Federal Ministry of Social Securityயில் பதிவு செய்துள்ளேன்.  நான் அந்த முதியவருக்கு செலவிடும் நேரங்கள் என்னுடைய கணக்கில் வரவு வைக்கபடும்.  

எப்பொழுது எனக்கு உதவி தேவை படுகிறதோ அப்பொழுது Swiss Federal Ministry of Social Securityக்கு சொன்னால் அவர்கள் யாரையாவது உதவிக்கு அனுப்பி என் கணக்கில் உள்ள நேரத்தை செலவு செய்வார்கள் என்று விளக்க மளித்தார்.

அவர் மேலும் இது பற்றி சொல்லும் போது இத்திட்டத்தில் கணக்கு தொடங்க விரும்புபவர்கள் ஆரோக்கியமாகவும் சேவை மனபான்மை உடையவர்களாகவும் இருப்பது அவசியம். தினமும் உதவி தேவைபடும் முதியவர்களை அக்கறையுடன் கவனித்து கொள்ள வேண்டும்.

இப்படி அவர்கள் செலவிடும் நேரம் அரசு முகாமைத்துவம்  பண்ணும் அவர்கள் கணக்கில் வரவு வைக்கபடும். ஒவ்வொரு வருட முடிவிலும் இந்ந நேர வங்கி (Time Bank) எத்தனை மணி நேரம் வரவு வைக்க பட்டுள்ளது என்று கணக்கிட்டு நேர சேமிப்பு அட்டை (Time Bank Card) வழங்குவார்கள்.

நமக்கு தேவைப்படும் போது அந்த அட்டையை பயன் படுத்தி நம்முடைய நேரத்தை எடுத்து கொள்ளலாம்.  அப்படி நாம் நம் நேரத்தை எடுக்க முன் அனுமதி கொடுக்கும் போது, அவர்கள் நமக்கு உதவி செய்ய 'நேர சேமிப்பாளர்கள் யாரையாவது அனுப்பி வைப்பார்கள்.  

இத்திட்டத்தினால் நாமும் எந்தவித தாழ்வுமனப்பான்மயின்றி அவரிடம்உதவியை பெற்று கொள்ள முடியும்

வீட்டில் தவறி  விழுந்த முதியவர் ஒருவரை அவசர சேவை மருத்துவ உதவிக்கு அழைத்து வந்திருந்தனர் நானும் மருத்துவ உதவிக்கு  வைத்திய சாலைக்கு சென்றுஇருந்தேன் வயோதிபறை அழைத்துவந்தவர் எனது அருகே அமர்ந்து இருந்தார் அவரிடம் அவசர மறுத்துவ ஊடக வேண்டி வந்தவர் தொடர்பாக விசாரித்தேன் அப்போதுதான் இந்த நேர வங்கி தொடர்பானவற்றை உறுதி செய்துகொண்டேன்

கீழே விழுந்த வேகத்தில் அந்த முதியவரின் கணுக்கால் உடைந்திருப்பதாகவும் சில நாட்கள் படுக்கையில் தான் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் சொல்லி விட்டனர்.  

நான்  வயோதிபரை  அழைத்து வந்தவரிடம் இவருக்கு உறவினர்கள் இல்லயா இவரை யார் பார்த்துக் கொள்வார்கள் என்று  விசாரித்தேன்   இவருக்கு உறவினர்கள் நிறயவே உள்ளனர் இந்த முதியவர் நேர வங்கியில் கணக்கு வைத்துள்ளார் எனவே  இவர் தனது உறவினரை கஷ் ட்டப்படுத்த தேவை இல்லை

Work at Home நேர வங்கி வங்கி அவருக்கு உதவி செய்யும்  என்றார் அரைமணி நேரத்தில் அவரை கவனித்து கொள்ள ஒரு இளைஞர் வந்திருப்பதை கவனித்தேன்.

அவர் கணக்கில் தேவையான அளவு நேரம் வரவுவைக்க பட்டிருந்தாகவும் அதை எடுத்து பயன் படுத்த முன் அனுமதி  கொடுத்ததால் அரசு  இந்த இளைஞரை அனுப்பி இருந்தாகவும் தெரிவித்தார்.  

என்ன அருமையான திட்டம் இந்த நேர சேமிப்பு திட்டம் என்பதும் அதன் அருமயும்  அப்போதுதான் எனக்கு புரிந்தது.

இன்று சுவிட்சர்லாந்து தேசத்தில் இந்த நேர வங்கி திட்டம் முதியவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் அருமையான திட்டமாக திகழ்கிறது.

இது நாட்டின் பென்ஷன் செலவுகளை குறைப்பது மட்டுமல்லாமல் ஒரு சமூக தீர்வாகவும் செயல்பாட்டில் உள்ளது.

பெரும்பான்மையான சுவிஸ் குடிமக்கள் இந்த முதியோர் நலதிட்டத்தை ஆதரித்து தங்கள் பங்களிப்பை வழங்குகிறார்கள்.

அதிகப்படியான சுவிஸ் குடிமக்கள் இத்திட்டதில் பங்களிக்க கணக்கு தொடங்க விரும்புவதாக சுவிட்சர்லாந்து தேசத்து சர்வே ஒன்று சொல்கிறது. ஸ்விஸ் அரசும் இந்த நேர வங்கி  திட்டத்தை ஆதரிக்க சட்டமியற்றி உள்ளது.