Advertisement Contact

கனடாவில் பட்டப்பகலில் பெண்ணைக் கடத்திய தமிழர்,

சந்தோஷ்குமார் செல்வராஜா என்பவரால் காரில் கடத்தப்பட்ட பெண், காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார் என்று ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சந்தோஷ்குமார் செல்வராஜா என்பவரால் காரில் கடத்தப்பட்ட பெண், காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார் என்று ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.

திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் காயங்களுடன் குறித்த பெண் கண்டுபிடிக்கப்பட்டார் என்றும் எனினும் அவர் மோசமான காயங்களுக்கு உள்ளாகவில்லை என்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரொறன்ரோ ஸ்காபரோவில், Hopkinson பகுதியில், Empringham Drive, Sewells வீதியில் வைத்து கார் ஒன்றில் வந்த நபரால், நேற்று மாலை 5.41 மணியளவில் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.

பட்டப்பகலில் நடந்த இந்த கடத்தலை அடுத்து, 34 வயதுடைய செல்வராஜா சந்தோஷ்குமார் என்பவரை பொலிசார் தேடுவதாக அறிவித்திருந்தனர். அவரது காரின் இலக்கத் தகடு விபரங்களையும் வெளியிட்டிருந்தனர்.

எனினும் கடத்தப்பட்ட பெண்ணுக்கும் சந்தேக நபருக்கும் இடையிலான உறவு முறை தொடர்பாக எந்த தகவலையும் பொலிசார் வெளியிடவில்லை.

இந்த நிலையிலேயே நேற்றிரவு 10 மணியளவில் கடத்தப்பட்ட பெண் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

அவரைக் கடத்திய சந்தேகநபரான சந்தோஷ்குமார் செல்வராஜாவை தேடி வருவதாகவும் அவர் பற்றிய தகவல்களை வழங்குமாறும் ரொறன்ரோ பொலிசார் கோரியுள்ளனர்.