Advertisement Contact

மனிதன் என்னும் சொல்லுக்கான வேறு தமிழ்ப் பெயர்கள்,

தொகுப்பு-மார்க்கண்டு தேவராஜா(LLB-MP-TGTE)Mayuraagoldsmith-Zurich-Switzerland மனிதன்/ human என்னும் சொல்லுக்கான வேறுபெயர்கள்:

    அரி
    ஆண்டையன்
    ஆண்டோன்
    ஆறறிவன்
    இமைப்போன்
    இமையவன்
    இயன்
    உலகத்தான்
    ஊனவன்
    ஊன்கணாளன்
    கண்டன்
    நரன்
    பூவன்
    மண்ணவன்
    மன்
    மானவன்
    மாந்தன்
    மானிடன்
    மைந்தன்
    வைசேயன்

    பெருமளவாக திரண்டு இருக்கும் மனிதர்களைக் குறிக்க பயன்படும் சொற்கள்:

    எழால்
    மக்கள்
    மாக்கள்

    அவ்வாறு திரண்டு இருக்கும் மக்களைக் குறிக்க பயன்படும் சொற்கள்:

    ஈட்டம்
    களர்
    களன்
    கற்றை
    கூட்டம்
    கூட்டரவு
    திரள்
    நாரம்
    நெருள்

இவ்வாறு மக்கள் ஒன்று கூடும் நிலமையை குறிக்க கூட்டநாட்டம் என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது.
மனிதர்களாய்ப் பிறக்கும் நிலையினை குறிக்க மக்கட்கதி என்னும் சொல் பயன்படுகிறது
மன்பதை , பைஞ்ஞீல் - மக்கட் பரப்பு
தான் - இச்சொல்லானது அஃறிணை, உயர்திணை என இரண்டிலும் உள்ள உயிரினங்கள் தம்மைத்தாமே குறித்துக்காட்ட பயன்படும் சொல்லாகும்.