Advertisement Contact

பிரான்ஸில் மீண்டும் வேகமாக பரவும் கொரோனா 1392 பேர் பாதிப்பு 15 பேர் பலி.

பிரான்ஸில் கொடிய கொரோனா வைரஸ் (COVID -19) பெருந்தொற்று மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் அங்கு ஆயிரத்து 392பேர் பாதிக்கப்பட்டதோடு, 15பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 26ஆம் திகதிக்கு பிறகு (1,588பேர்) தற்போது மீண்டும் COVID-19 பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது.

இதேவேளை, பிரான்ஸில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக ஒரு இலட்சத்து 85ஆயிரத்து 196பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30ஆயிரத்து 238பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது COVID-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 73ஆயிரத்து 647பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 385பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 81ஆயிரத்து 311பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.