Advertisement Contact

கனடாவில் 24 மணித்தியாலத்தில் கொரோனா தாக்கத்தால் 329 பேர் பாதிப்பு 12 பேர் பலி,

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொடிய கொரோனா வைரஸ் தொற்றினால் 329பேர் பாதிப்படைந்ததோடு, 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,15,799ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் , 8,929பேர் மொத்தமாக உயிரிழந்துள்ள நிலையில் , 6,008பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 1,00,862பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் 2,240பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.