Advertisement Contact

தமிழகத்தில் இன்று 5,881 பேருக்கு கொரோனா,

தமிழகத்தில் இன்று 5,881 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 5,778 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று புதிதாக 5,881 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 2,45,859 ஆக உயர்ந்துள்ளது. இன்று 97 பேர் உயிரிழந்ததால் மொத்த எண்ணிக்கை 3935 ஆக உயர்ந்துள்ளது. இன்று அரசு மருத்துவமனையில் 68 பேரும், தனியார் மருத்துவமனையில் 29 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இன்று 5,778 பேர் குணமடைந்ததால் மொத்த எண்ணிக்கை 1,83,956 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 60,276 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக இதுவரை 26,58,138 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று 58,350 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட நிலையில் ஒட்டுமொத்தமாக 25,60,269 பேருக்கு பரிசோதனை மோற்கொள்ளப்பட்டுள்ளது.