Advertisement Contact

தேசியத் தலைவரை நேசிக்கும் மக்கள் சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டாம்,

தேசியத் தலைவரை நேசிப்பவர்கள் சுமந்திரனுக்கு வாக்களிக்கக் கூடாது என்று மூத்த போராளியும், மாவீரன் ஒருவரின் தந்தையுமான காக்கா (முத்துக்குமார் மனோகர்) பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எமது தேசியத் தலைவரால் அடையாளப்படுத்தப்பட்ட கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரியோ, தவறோ அதற்கு வாக்களிப்பது எமது கடமை என கணிசமானவர்கள் கருதுகின்றனர்.

அவ்வாறனவர்களுக்கு நான் ஒன்றை கூறுகின்றேன். கூட்டமைப்பில் போட்டியிடும் வாக்காளர்களின் சுமந்திரனைத் தவிர வேறு யாராவது மூவருக்கு வாக்களிக்குமாறு பணிவாகக் கேட்டுக் கொள்கின்றேன்.