Advertisement Contact

சுவிஸில் கொரோனா பாதிப்புடன் இரவு விடுதிக்கு சென்ற நபர்,

தனிமைப்படுத்தலுக்கு உள்ளான 300 பேர்  சுவிட்சர்லாந்தின் சோலோத்தூர்ன் மண்டலத்தில் கொரோனா பாதிப்புடன் இரவு விடுதிக்கு சென்ற நபரால், அந்த விடுதிக்கு சென்றுவந்த 300 பேர் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சோலோத்தர்ன் மண்டலத்தில் செவ்வாய்க்கிழமை மாலை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட அந்த நபர் வார இறுதியில் ஓல்டனில் உள்ள பல்வேறு பார்கள், உணவகங்கள் மற்றும் கிளப்புகளுக்கு சென்று வந்துள்ளார்.

தகவலறிந்த மண்டல மருத்துவ சேவையகம் ஆல்டனில் உள்ள டெர்மினஸ் கிளப்பின் அருகிலுள்ள 300 பேருக்கு தனிமைப்படுத்த உத்தரவிட்டது.

மட்டுமின்றி இதே காரணங்களால் மேலும் 36 பேர் தற்போது தனிமைப்படுத்தலுக்கு இலக்காகியுள்ளனர்.

இதனால் சோலோத்தர்ன் மண்டலத்தில் மட்டும் கடந்த சில தினங்களில் சுமார் வ்340 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.