Advertisement Contact

இந்த 14 நாடுகள் மட்டுமே பாதுகாப்பானது அவர்களுக்கு அனுமதி,

ஐரோப்பிய யூனியன் வெளியிட்ட பட்டியல் - கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத பாதுகாப்பான 14 நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிப்பதாக, ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.

சீனாவில் முதன் முதலில் தென்பட்டதாக கூறப்படும் இந்த கொரோனா வைரஸ், அதன் பின் மார்ச் மாதத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது.

இதன் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், இந்த நோயின் பரவலை தடுப்பதற்காக, மற்ற நாடுகளை சேர்ந்தவர்களை அனுமதிக்க வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி இருந்தது.

தற்போது சில நாடுகளை தவிர மற்ற நாடுகளில் நோயின் தீவிரம் சற்றுகுறைந்து காணப்படுகிறது.

இந்தநிலையில் நோய் பாதிப்பு அதிகம் இல்லாத பாதுகாப்பான 14 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிப்பதாக ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.

பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் அல்ஜீரியா, அவுஸ்திரேலியா, கனடா, ஜார்ஜியா, ஜப்பான், மொராக்கோ, நியூசிலாந்து, ருவாண்டா, செர்பியா, தென்கொரியா, தாய்லாந்து, துனிசியா, உருகுவே, மான்டெனக்ரோ ஆகிய நாடுகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

இந்த பட்டியலில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இடம்பெறவில்லை. எனவே இந்த நாடுகளை சேர்ந்தவர்கள் ஐரோப்பிய யூனியனுக்கு செல்ல அனுமதி இல்லை.