Advertisement Contact

வாகனம் vehicle என்னும் சொல்லைக் குறித்த வேறு தமிழ்ப் பெயர்கள்,

தொகுப்பு-மார்க்கண்டு தேவராஜா(LLB-MP-TGTE)Mayuraagoldsmith-Zurich-Switzerland பண்டைய தமிழகத்தில் வாகனம்/ vehicle என்ற சொல்லைக் குறிக்க பெருமளவான தமிழ் சொற்கள் இருந்துள்ளன. அச்சொற்களையே நாம் இக்காலத்திலும் பயன்படுத்தலாம்.
    அவை :

    பண்டி/ வண்டி
    பாண்டில்/வண்டில்
    ஊர்தி
    சகடு
    சாடு
    சாகடம்
    யானம்
    அணிகம்
    ஒழுகை
    உருள்
    தோரணம்
    இண்டனம்
    கண்டோதம்
    தண்டாரம்
    வகம்
    உருடை
    கூவரி
    வாகம்
    கடகம்
    கந்து
    கால்

        ஒயில் வண்டி- மகிழ்வான பயணத்திற்கேற்ற வண்டி
        அரசவாகனம்- கஞ்சிகை , மணிகாற்பள்ளி

    மூடிய வாகனங்களைக் குறிக்க அக்காலத்தில் வழங்கப்பட்ட பெயர்- வையகம், வையம், கூட்டு வண்டி, வங்க வண்டி
    வில்வண்டி / ஆரைச்சாகாடு : மேற்புறக்கூரை மேல் நோக்கி வளைந்திருக்கும்.
    புறாக்கூட்டு வண்டி
    காளை/மாட்டு வண்டி -கட்டை வண்டி
    ஏற்றூர்தி
    தண்டிகை
    கோத்தேர்- எருதினால் இழுக்கப்படும் தேர்
    ஒற்றை மாட்டு வண்டி
    இரட்டை மாட்டு வண்டி
    மொட்டை வண்டி
    பந்தய வண்டி

    கட்டு வண்டி - ஆள் இழுக்கும் வண்டி

மேலே உள்ள வாகனங்களைச் செலுத்த ஒருவர் இருப்பார். அவரைக் குறிக்க தமிழில் வழங்கப்படும் சொற்கள் :

    பாகன்
    சாரகன்
    தேரகன்
    தாரகன்
    கோலாள்
    எந்திரு
    கொற்றன்

மேலே உள்ளவற்றில் பெரும்பாலான சொற்கள் தேரினைச் செலுத்துபவரையே குறித்தது... இருந்தாலும் ஒரு சில சொற்கள் பொதுவாக சாதாரண வாகனங்களை செலுத்துபவரையும் குறித்தது. அவை :

    ஓட்டுநர்
    துரத்தநர்
    பாகன்
    பாகு
    வலவன்
    சாரோட்டி

    பண்ணுறுத்தல்-            வண்டி சரி செய்தல்
    வண்டி சரி செய்பவன்-    பண்ணுறுத்தன்
    பண்ணுறுதகம் - garage -வண்டி சரிசெய்யும்மிடம்