Advertisement Contact

யானைக்கு இத்தனை தமிழ்ப்பெயர்களா,

தொகுப்பு-மார்க்கண்டு தேவராஜா(LLB-MP-TGTE)Mayuraa goldsmith-Zurich-Switzerland, யானையின் தமிழ்ப்பெயர்கள்: உலகிலயே ஒரு மிருகத்துக்கு இவ்வளவு பெயர்கள் இருப்பது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் செழிப்போடு வாழ்ந்து கொண்டு இருக்கும் நமது தாய்மொழியில் தான். கொடுமை என்னவென்றால் குழந்தைகள் தற்போது யானை என்று கூட அழைப்பது இல்லை. எலிப்பென்ட் என்ற ஒற்றை வார்த்தையே முன்னிலை பெறுகிறது. தாய்மொழியை நேசிப்போம்.
யானையின் தமிழ்ப்பெயர்கள்

யானையை குறிக்க ஏராளமான தமிழ் பெயர்கள் வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை.
யானை என்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர். வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன். இத்தனை பெயர்களுக்கு இடம் கொடுக்கும் தமிழ் மொழியின் செம்மைத் திறன்!

இவை சங்க இலக்கியங்களிலும், பாடல்களிலும் பல்வேறு இடங்களில் கையாளப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மனிதர்களை போலவே யானைகளுக்கும் இளமை கால பெயர்கள் உண்டு..

ஒவ்வொரு மொழியிலும் அதற்கென்று பல சிறப்புகளை கொண்டிருக்கும், சில மொழிகள்  'அடாப்டட்
' என்று சொல்லக்கூடிய ஒரு மொழியையோ அல்லது பல மொழிகளையோ சார்ந்து இயங்கிக்
கொண்டிருக்கும். அந்த வகையில் இல்லாமல் தமிழ் மொழி  சிறப்புகளை கொண்டிருப்பது ஆய்வுக்கு
உரியது.

ஒரு உதாரணம், யானை என்ற வார்த்தைக்கு பல பெயர்களையும் அர்த்தங்களையும் கொண்டிருக்கிறது
தமிழ் மொழி.  அதே போல யானையின் பல வகைகளையும் அதன் வாழ்க்கையையும், பாலின
வேறுபாடுகளையும், குண நலன்களையும், இனங்காட்டவே பல சொற்கள் பிறபிக்கப்பட்டு
சங்ககாலத்தில் இருந்து பேச்சு வழக்கிலும்,  இலக்கியங்களிலும் பயன் படுத்தப் பட்டு
வந்திருக்கிறது.

வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு என்பதற்கு இதை விட வேறு
சான்று தேவை இல்லை.

யானை என்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர். வியக்க வைக்கும்
தமிழர்களின் அறிவுத் திறன்.  இத்தனைப் பெயர்களுக்கு இடம் கொடுக்கும் தமிழ் மொழியின்
செம்மைத் திறன்.

தமிழ் இலக்கியங்களில் யானைகளை ஆண், பெண், குட்டி, அறுபது வயதிற்கு மேலான யானை, போர் யானைகள் என்ற அடிப்படையில் மட்டும் அல்லாது இன்னும் பல்வேறுப் பிரிவுகளாக அவற்றைப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான பெயரிட்டு அழைத்து வந்துள்ளனர்.இதன் மூலம் பழந்தமிழர்களின் வாழ்வினில் யானைகள் எவ்வளவு பயன் ஆற்றின என்பதையும், தமிழர்கள் அந்த யானைகளை எவ்வளவு ஆழமாக உணர்ந்து அவற்றின் பிரிவுகளை வரையறுத்து வைத்து இருந்தார்கள் என்பதையும் அறியலாம்.
பொருளடக்கம்

யானையின் தமிழ்ப்பெயர்கள்

    01-யானை/ஏனை (கரியது)
    02-வேழம் (வெள்ளை யானை)
    03-களிறு
    04-களபம்
    05-மாதங்கம்
    06-கைம்மா (துதிக்கையுடைய விலங்கு)
    07-உம்பர்
    08-உம்பல் (உயர்ந்தது)
    09-அஞ்சனாவதி
    10-அரசுவா
    11-அல்லியன்
    12-அறுபடை
    13-ஆம்பல்
    14-ஆனை
    15-இபம்
    16-இரதி
    17-குஞ்சரம்
    18-இருள்
    19-தும்பு
    20-வல்விலங்கு
    21-தூங்கல்
    22-தோல்
    23-கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது)
    24-எறும்பி
    25-பெருமா (பெரிய விலங்கு)
    26-வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது அல்லது புல்லை வாரிப்போடுவது)
    27-புழைக்கை/பூட்கை (துளையுள்ள கையை உடையது)
    28-ஒருத்தல்
    29-ஓங்கல் (மலைபோன்றது)
    30-நாக
    31-பொங்கடி (பெரிய பாதத்தை உடையது)
    32-கும்பி
    33-தும்பி (துளையுள்ள கையை உடையது)
    34-நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது)
    35-குஞ்சரம் (திரண்டது)
    36-கரேணு
    37-உவா (திரண்டது)
    38-கரி (கரியது)
    39-கள்வன் (கரியது)
    40-கயம்
    41-சிந்துரம்
    42-வயமா
    43-புகர்முகம் (முகத்தில் புள்ளியுள்ளது)
    44-தந்தி
    45-மதாவளம்
    46-தந்தாவளம்
    47-கைம்மலை (கையை உடைய மலை போன்றது)
    48-வழுவை (உருண்டு திரண்டது)
    49-மந்தமா
    50-மருண்மா
    51-மதகயம்
    52-போதகம்
    53-யூதநாதன் (யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்)
    54-மதோற்கடம்(மதகயத்தின் பெயர்)
    55-கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்)

பெண் யானையின் பெயர்கள்

    பிடி
    அதவை
    வடவை
    கரிணி
    அத்தினி

யானைக்கன்றின் பெயர்கள்(இளமைப் பெயர்கள்)

    கயந்தலை
    போதகம்
    துடியடி
    களபம்
    கயமுனி

சான்று
    விலங்கின் பெயர்த் தொகுதி,
    சூடாமணி நிகண்டு, தமிழம் வலை
    மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணரின் சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்.

கீழ்உள்ள பெயர்த் தொகுதி வேறொரு தொகுப்பில் இருந்து பெறப்பட்டது.

(1) கயந்தலை – பிறந்த உடனான யானையின் பெயர்

(2) போதகம் – எழுந்து நிற்க தொடங்கும் பருவம்

(3) துடியடி – ஓடி ஆடி விளையாடும் பருவம்

(4) களபம் – உணவு தேடி செல்லும் பயிற்சி பெரும் பருவம்

(5) கயமுனி – மற்ற இளம் யானைகளுக்கு பயற்சி அளிக்கும் பருவம்

பெண்*யானையின் பெயர்கள்

பிடி, அதவை, வடவை, கரிணி, அத்தினி.

நிறங்களை கொண்டு யானையின் பெயர்கள்

(1) கரிய நிறம்: யானை/ஏனை

(2) வெள்ளை நிறம்: வேழம்

யானையின் மற்ற காரண பெயர்கள்

(1) உம்பல் – உயர்ந்தது

(2) கறையடி – உரல் போன்ற பாதத்தை உடையது.

(3) பெருமா – பெரிய விலங்கு

(4) வாரணம் – சங்கு போன்ற தலையை உடையது

(5) புழைக்கை / பூட்கை / தும்பி – துளையுள்ள கையை உடையது

(6) ஓங்கல் – மலை போன்றது

(7) பொங்கடி – பெரிய பாதத்தை உடையது

(8) நால்வாய் – தொங்குகின்ற வாயை உடையது

(9) குஞ்சரம் / உவா – திரண்டது

(10) கள்வன் – கரியது

(11) புகர்முகம் – முகத்தில் புள்ளியுள்ளது

(12) கைம்மலை – மலையை போன்ற கையை உடையது

(13) வழுவை – உருண்டு திரண்டது

(14) யூதநாதன் – யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்

(15) மதோற்கடம் – மதகயத்தின் பெயர்

(16) கடகம் – யானைத்திரளின் / கூட்டத்தின் பெயர்.


யானையின் ஏனைய பெயர்கள்

(1) களிறு

(2) மாதங்கம்

(3) கைம்மா

(4) உம்பர்

(5) அஞ்சனாவதி

(6) அரசுவா

(7) அல்லியன்

(8) அறுபடை

(9) ஆம்பல்

(10) ஆனை

(11) இபம்

(12) இரதி

(13) குஞ்சரம்

(14) இருள்

(15) தும்பு

(16) வல்விலங்கு

(17) தூங்கல்

(18) தோல்

(19) எறும்பி

(20) ஒருத்தல்

(21) நாக

(22) கும்பி

(23) கரேணு

(24) கொம்பன்

(25) கயம்

(26) சிந்துரம்

(27) வயமா

(28) தந்தி

(29) மதாவளம்

(30) தந்தாவளம்

(31) மந்தமா

(32) மருண்மா

(33) மதகயம்

(34) போதகம்