Advertisement Contact

தமிழோடு இணைந்துள்ள பிறமொழிச் சொல்லும் அதன் அர்த்தமும்,

தொகுப்பு-மார்க்கண்டு தேவராஜா(LLB-MP-TGTE)Mayuraagoldsmith-Zurich-Switzerland. தமிழின் தனிப்பெரும் தகுதியும் மதிப்பும் தமிழோடு இணைந்துள்ள பிறமொழிச் சொல்லும் அதன் அர்த்தமும்,உங்களுக்குத் தெரியுமா தெரிந்து கொள்ளுங்கள்,

அக்கணம் - அப்பொழுது
அக்கிரகாரம் - பார்ப்பனச்சேரி, பார்ப்பனர்கள் வசிக்கும் இடம்
அக்கிரமம் - ஒழுங்கின்மை, முறைகேடு
அக்னி,அக்கினி அக்நி - நெருப்பு, தீ, அனல் எரி
அகங்காரம் - செருக்கு, இறுமாப்பு, முனைப்பு, யானெனல்
அகடவிகடம் - வேறுபட்டது, குறும்பு மாற்று
அகதி - அறவை, வறியர், ஏழை, புகலிலார்,\\யாருமற்றவர், ஆதரவற்றவர்
அகந்தை - இறுமாப்பு, செருக்கு
அகம்பாவம் - தற்பெருமை, செருக்கு
அகராதி - அகரமுதலி, அகரவரிசை, அகரநிரல்
அகிம்சை - இன்னா செய்யாமை, ஊறு செய்யாமை
அங்கம் - உடல்உறுப்பு
அங்கீகாரம் - ஒப்புதல்
அங்கத்தினர் - உறுப்பினர்
அசத்தை - பொய்
அசுத்தம் - அழுக்கு, துப்புரவின்மை, தூய்மையின்மை
அசிரீரி - உருவமற்றது, வானொலி
அசீரணம் - அழிவுபடாமை, பசியின்மை, செரியாமை
அஞ்சலி - கும்பிடல், வணக்கம் செய்தல்
அஞ்சனம் - மை, கறுப்பு, இருள்
அஞ்ஞாதம் - மறைவு அறியப்படாதது
அண்டம் - முட்டை, உலகம், வித்து மூலம்
அதிகாரி - உயர் அலுவலர்
அதீதம் - மிகை
அப்பியாசம் - பயிற்சி, பழக்கம்
அபயம் - அடைக்கலம்
அபகரித்தல் - பறித்தல், கவர்தல்
அபத்தம் - பொய், பொம்மை
அபிவிருத்தி - பெருவளர்ச்சி
அபிஷேகம் - திருமுழுக்கு
அபிப்பிராயம் - உட்கருத்து
அபூர்வம் - அருமை
அனுக்கிரகம் - அருள் செய்தல்
அனுபந்தம் - பிற்சேர்க்கை
அனுபவம் - பட்டறிப்பு, நுகர்வு
அவகாசம் - ஓய்வு
அவசரம் - விரைவு
அவசியம் - தேவை
அவயவம் - உறுப்பு
அலாதி - தனி
அந்தியம் - முடிவு, சாவு
அந்தியக்கிரியை - ஈமவினை, இறுதிக்கடன்
அந்திய காலம் - முடிவுக்காலம், இறுதிக்காலம்
அந்நியர் - பிறர், வேறுபட்டவர், வேற்று நாட்டினர்
அந்தரங்கம் - மறைவடக்கம்
அந்தரம் - பரபரப்பு
அந்தி - மாலை
அந்தஸ்து - நிலைமை
அந்நியம் - வேறுபாடு, வேற்றுமை,
அந்தஸ்து - நிலை
அநர்த்தம் - அழிவு, கேடு
அநந்தம் - முதலில்லாது, அளவில்லாதது, முடிவிலி, அளவற்றது
அநாதி - தொடக்கமிலி, தொடக்கமின்மை
அநாதை - துணையிலி, யாருமிலி
அநியாயம் - முறையின்மை, முறைகேடு
அநீதி - முறையற்றது, நடுவின்மை, முறைகேடு
அநுகூலம் - சார்பு
அநுட்டித்தல் - கைக்கொள்ளல், கடைப்பிடித்தல்
அநுஷ்டித்தல் - கைக்கொள்ளல், கடைப்பிடித்தல்
அநுதாபம் - இரக்கம், அருளல், இரங்கல்
அநுதினம் - நாள் தோறும்

இஸ்திரிப் பெட்டி - துணி மடிப்புக் கருவி
இனாம் - நன்கொடை
ஆகாயம் - வானம்
ஆசை - விருப்பம்
ஆபத்து - துன்பம், இடர்
ஆராதனை - வழிபாடு
ஆன்மா - உயிர்
ஆஜர் - வருகை
ஐக்கியம் - ஒற்றுமை
உபத்திரவம் - வேதனை
உற்சவம் - திருவிழா
கல்யாணம் - திருமணம்
கடிதம் - மடல்
கரம் - கை
கதிரை - நாற்காலி, அணை, இருக்கை
கஷ்டம் - தொல்லை
கட்டில் - மஞ்சம்
கடிகாரம் - கன்னல்,மணிக்கூடு
கறார் விலை - ஒரே விலை
கஜானா - கருவூலம்
கம்மி - குறைவு
காலி - நிரப்பப்படாமல் உள்ள நிலை
காலிப்பயல் - போக்கிரி
காருண்யம் - பரிவு
காரியம் - செயல்
காரியாலயம் - செயலகம்.
காரியதரிசி - செயலர், செயலாளர்
கிஸ்தி - வரி
கிரயம் - விலை
கிராமம் - சிற்றூர்
கீதம், கானம், கானா - பாட்டு,பாடல்
கும்பாபிஷேகம் - குடமுழுக்கு
குதூகலம் - எக்களிப்பு
கைதி - சிறையாளி
கோஷ்டி - குழாம்
கோத்திரம் - குடி
கோப்பை - கிண்ணம்
----------------------------------------
சகஜம் - வழக்கம்
சக்தி - ஆற்றல், வலு
சக்கரவர்த்தி - பேரரசன்
சச்சிதானந்தம் - மெய்யறிவின்பம்
சட்டை - அங்கராத்து,மேலாடை,மெய்ப்பை
சதவீதம் - நூற்றுக்கூறு,விழுக்காடு
சபதம் - சூள்
சர்க்கார் - அரசாங்கம்
சரகம் - எல்லை (சரகம் என்ற வார்த்தை வனச்'சரகம்' என்பதில் வருவதுண்டு)
சரணம் - அடைக்கலம்
சரணாகதி - அடைக்கலம்
சனி (கிழமைகளில்) - காரி
சங்கீதம் - இசை
சத்தியாக்கிரகம் - அறப்போராட்டம்
சந்தா - கட்டணம்
சந்தேகம் - ஐயம்
சந்தோஷம் - மகிழ்ச்சி
சந்ததி - வழித்தோன்றல்
சந்தர்ப்பம் - வாய்ப்பு
சந்தியாவந்தனம் - வேளை வழிபாடு
சம்பளம் - கூலி, ஊழியம்
சம்பிரதாயம் - தொன்மரபு
சமீபம் - அண்மை
சவால் - அறைகூவல்
சாஸ்திரம் - கலை
சாபம் - கெடுமொழி
சாதாரண - எளிதான
சாட்சி - சான்று
சாமான் - பண்டம்
சிகிச்சை - மருத்துவமுறை
சிங்காசனம் - அரியணை
சிப்பந்தி - வேலையாள்
சிபாரிசு - பரிந்துரை
சிரம் - தலை, சென்னி
சிநேகம் - நட்பு
சீதனம் - மணக்கொடை
சீதோஷ்ணம் - தட்பவெப்பம்
சுகம் - இன்பம்
சுத்தம் - தூய்மை
சுதந்திரம் - விடுதலை
சுபாவம் - இயல்பு
சுமார் - ஏறக்குறைய
சுயம் - தன்
சுயதொழில் - தன்தொழில்
சுயராஜ்யம் - தன்னாட்சி
செருப்பு - பாதணி
சேவை - தொண்டு,பணி
சேஷ்டை - குறும்பு
சௌகரியம் - வசதி
-------------------------------
நமஸ்காரம்,சலாம் - வணக்கம்
நஷ்டம் - இழப்பு
நிபுணர் - வல்லுநர்
நிமிஷம் - மணித்துளி
நியாயஸ்தலம் - வழக்கு மன்றம்
நீதி - நடுநிலை நன்னெறி
நேரம் - ஓரை,நாழி
---------------------------------
தசம் - புள்ளி
தற்காலிக வேலை - நிலையிலா வேலை
தஸ்தாவேஜூ - ஆவணம்
தாகம் - வேட்கை
திருப்தி - உள நிறைவு, மன நிறைவு
தினம், நிதம் - நாள்
தேதி - நாள்
தேசம் - நாடு
துவக்கு - சுடுகலன்
---------------------------------------
பக்தன் - அடியான்
பகிரங்கம் - வெளிப்படை
பசங்கள் - பிள்ளைகள்
பத்தினி - கற்பணங்கு
பத்திரிக்கை - இதழ், செய்தித்தாள்
பரஸ்பர ஒத்துழைப்பு - சமதரப்பு ஒத்துழைப்பு
பரிகாசம் - நகையாடல்
பரீட்சை - தேர்வு
பந்துக்கள் - உறவினர்கள்
பந்தோபஸ்து - பாதுகாப்பு
பவுண், பவுன் - பொன், தங்கம்
பஜனை - கூட்டுப்பாடல் வழிபாடு
பாக்கியம் - பேறு
பாரம் - சுமை
பாண் - வெதுப்பி
பாஷை - மொழி
பிரகாரம் - திருச்சுற்று
பிரச்சாரம் - பரப்புவேலை, பரப்புரை
பிரச்சினை - சிக்கல்
பிரசாதம் - திருப்பொருள்
(அங்கப்) பிரதட்சனம் - வலம் வருதல்
பிரார்த்தனை - நேர்த்திக்கடன்
புதன் (கிழமைகளில்) - அறிவன்
புத்தகம் - நூல் (பொத்தகம் தமிழ் என்போரும் உண்டு)
புருஷன் - கணவன்
பூச்சியம்,சைபர் - சுழியம்
பூர்வம் - முந்திய
பூஜை - பூசெய் (பூசை)
போஜனம் - ஊண்,உணவு,சாப்பாடு
---------------------------------------
மந்திரி - அமைச்சன்
மந்திரம் - மறைமொழி
மரணம் - சாவு, இறப்பு
மாமிசம் - இறைச்சி
மார்க்கம் - நெறி, வழி
மிருகம் - விலங்கு
முகூர்த்தம் - நல்வேளை
முக்கியம் - முகன்மை
முகாம் - பாசறை
மோசம் - கேடு
----------------------------------------
யந்திரம் - பொறி
யாகம் - வேள்வி
யுத்தம் - போர்
-------------------------------------
இரகசியம் - மறைபொருள், கமுக்கம்
இரதம் - தேர்
இரத்தம் - குருதி,உதிரம்
இராகம் - பண்
இராத்திரி - இரவு,அல்
இராச்சியம்,தேசம் - நாடு
இராணுவம் - படை
ருசி - சுவை
-------------------------------------
வயது - அகவை
வருடம், வருசம், வருஷம் - ஆண்டு
வாகனம் - ஊர்தி
வாதம் - சொற்போர்
வாத்தியம் - இசைக்கருவி
வார்த்தை - சொல்
வாரம் - கிழமை
வாந்தி பேதி - கக்கல் கழிச்சல்
வாயு - காற்று
வாலிபர் - இளைஞர்
விக்கிரகம் - திருவுருவம்
விசயம், விஷயம் - பொருள், செய்தி
விசேஷம் - சிறப்பு
விபத்து - துன்ப நிகழ்ச்சி
விவாகம் - திருமணம்
விரதம் - நோன்பு
விஷம் - நஞ்சு
விஜயம் - பயணம்
வீரம் - மறம்
வீதி - தெரு, சாலை
வேகம் - விரைவு
வேதம் - மறை
வைத்தியசாலை - மருத்துவமனை
------------------------------------------
ஜகாவாங்குதல் - பின்வாங்குதல்
ஜமீன் - நிலம்
ஜமீன்தார் - நிலக்கிழார்
ஜல்லிக்கட்டு - மஞ்சுவிரட்டு, ஏறு தழுவுதல்
ஜனனம் - பிறப்பு
ஜன்னல் - சாளரம்
ஜனங்கள் - மக்கள்
ஜயம் - வெற்றி
ஜாக்கிரதையாக - விழிப்பாக
ஜாஸ்தி - மிகுதி
ஜீவன் - உயிர்
ஜென்மம் - பிறவி
ஜோடி - இணை
------------------------------------------
யாத்திரை - திருச்செலவு
இலட்சணம் - அழகு
ஸ்தாபனம் - நிறுவனம், நிலையம்
க்ஷேத்திரங்கள் - திருப்பதிகள்

தமிழிலேயே மிக நீநீநீளமான சொல்?
தமிழ் மொழியின் அழகே, ஒலிப்புக்கேற்ற எழுத்தும் சொற்களும் தான்!
பெரும்பாலும் காரணப் பெயர்களே! இடுகுறிப் பெயர்கள் மிகவும் சொற்பம்!
உண்பதால் = உணவு (ஆனா ஆங்கிலத்திலோ eat=verb; food=noun)

அதே போல்...
* அவிப்பதால் = அவியல்
* பொரிப்பதால் = பொரியல்
* வடுப்பதால் = வடை
* தோய்ப்பதால் = தோசை
* பறப்பதால் = பறவை,
* செல்வதால் = செல்வம்...
* "கொள்வதால்" = கோள்!
எழுத்துக்களும் = 247 என்ற மலைப்பை முதலில் உருவாக்கினாலும்...
உயிர்=12, மெய்=18 - இவையே அடிப்படை எழுத்துக்கள்!
உயிர்மெய் தான் 216 - அதிக எழுத்துக்கள் என்ற "பிரமையை" உருவாக்குவது!
216 = உயிர் * மெய் என்ற சார்பு எழுத்துக்களே! ஆய்தமும் தனி எழுத்தே!
தமிழின் தன்மையே - நீள நீளச் சொற்கள் இல்லாமல், சுருக்கமான சொற்களால்,
கோர்வை உருவாக்கி எழுதுவதே!
இப்படித் தொடுப்பதால் தான் போலும்...தமிழை "மாலை" என்றார்கள்! (சங்கத்
"தமிழ் மாலை" முப்பதும் தப்பாமே...)
எ.கா: வடமொழியில், ஸ்வாமி புஷ்கரிணி = கோன்+ஏரி = கோனேரி
இப்படிச் சுருக்கமான சொற்களைக் கூட்டி உருவாக்கும் தமிழ்ச் சொற்கள்!