Advertisement Contact

NIB புலனாய்வாளன் செல்லா மற்றும் பொலிசாரின் ஆதரவுடன் யாழில் மின்னல் வாள்வெட்டு குழு,

இலங்கை தேசிய புலனாய்வுத்துறையைச் சேர்ந்த ‘செல்லா‘ என்று அழைக்கப்படும் பிரதீப் மற்றும் பொலிசார் சிலரின் ஆதரவுடன் வடமராட்சியில் செயற்பட்டு வந்த வாள்வெட்டு ரவுடிக் குழுவின் திருவிளையாடல்கள் தற்போழுது அம்பலமாகியுள்ளன. குறித்த புலனாய்வுத்துறையைச் சேர்ந்த செல்லா உட்பட நெல்லியடிப் பொலிசில் கடமையாற்றும் 4 பொலிசார் தற்பொழுது இடமாற்றப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

வடமராட்சியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை கடந்த ஓரிரு வருடங்களாக ‘மின்னல்‘ என்று அழைக்கப்பட்டு வந்த ரவுடிக் குழு குழப்பி வந்தது. வாள் வெட்டுச் சம்பவங்கள், கப்பம், மற்றும் கொலை அச்சுறுத்தல், பெண்களுடனான சேட்டைகள் போன்ற பல சட்டவிரோத செயற்பாடுகளை குறித்த மின்னல் குழு செய்து வந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

இது தொடர்பாக பொதுமக்கள் பருத்தித்துறை மற்றும் நெல்லியடிப் பொலிசாருக்கு அறிவித்தும் அவர்கள் அதற்கான நடவடிக்கையை சரியாகச் செய்யவி்ல்லை என பொதுமக்கள் ஏற்கனவே விசனம் தெரிவித்திருந்தனர். குறித்த குழுவுக்கும் பொலிசாருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என பொதுமக்கள் கருதி வந்தன்ர்.

இந் நிலையில் இலங்கையின் விசேட பாதுகாப்புத்தரப்புக்கு குறித்த மின்னல் குறுப்பின் அட்டகாசங்கள் தொடர்பாக முறைப்பாடு கிடைத்துள்ளது. இதனையடுத்து குறித்த மின்னல் குறுாப்பைச் சேர்ந்த முக்கியஸ்தரின் வீடு விசேட பாதுகாப்புத் தரப்பினரால் சுற்றி வளைக்கப்பட்ட போது பெரும் அதிர்ச்சித் தகவல்கள் மற்றும் ஆவணங்கள் வெளியாகியுள்ளன.

குறித்த மின்னல் குறுாப்புக்கும், செல்லா என்ற தேசிய புலனாய்வுதுறையைச் சேர்ந்த ஒருவனுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளதும் நெல்லியடிப் பொலிசார் சிலரும் அந்த குழுவில் தொழிற்பட்டுள்ளதும் வெளிவந்துள்ளது.

செல்லா என்று அழைக்கப்படும் தேசிய புலனாய்வு உறுப்பினர் பிரதீப்