Advertisement Contact

சென்னை மண்டலத்தில் 1768 பேருக்கு கொரோனா பாதிப்பு,

சென்னை மாநகரில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 1768 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடங்களை தனிமைப்படுத்தி, அந்த பகுதியில் உள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்து வருகிறது. சென்னையில் நேற்று மட்டும் புதிதாக 569 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க நகர் போன்ற மண்டலத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது.

இதையடுத்து சென்னையில் 758 இடங்கள் கொரோனா கட்டுபாட்டு பகுதியாக அறிவித்து அந்த பகுதியில் உள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை மாநகரில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 1768 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகரை தொடர்ந்து தேனாம்பேட்டை மண்டலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது.  சென்னையில் கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்,
சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10,576 ஆக உயர்ந்துள்ளது, தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 765 பேரில், 718 பேர் தமிழகத்திற்குள் இருந்தவர்கள் என்றும் 47 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முழு விவரம்:-

1. சென்னை - 587
2. செங்கல்பட்டு - 46
3. அரியலூர் - 1
4. கடலூர் - 4
5. கள்ளக்குறிச்சி -15
6. காஞ்சிபுரம் - 21
7. தேனி - 4
8. திருவள்ளூர் - 34
9. திருவாரூர் - 2
10. திருச்சி - 3
11. விருதுநகர் - 13
12. தூத்துக்குடி - 11
13. திருவண்ணாமலை - 4
14. கன்னியாகுமரி - 2
15. மதுரை - 6
16. புதுக்கோட்டை - 1
17. ராமநாதபுரம் - 3
18. ராணிப்பேட்டை - 2
19. தஞ்சாவூர் - 3